மாணவர்கள் கல்விச் சுற்றுலா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 4, 2024

மாணவர்கள் கல்விச் சுற்றுலா

featured image

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
கூடலூர் மலைவாழ் மற்றும் பழங்குடியினர் கிராமங்களில் சமூகப்பணித்துறை மாணவர்கள் கல்விச் சுற்றுலா

வல்லம், பிப். 4- தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை மாணவர் கள் சார்பாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள மலை வாழ் மற்றும் பழங்குடியினர் கிராமங்களில் 25.01.2024 முதல் 27.01.2024 வரை கல்வி சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது.
முதல் நாள் நிகழ்வு :
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித் துறை மாணவர்கள் மற்றும் அய்லான்ட் அறக்கட்டளை பணியாளர்கள் கூடலூர் பகுதி யில் புரமனவயல் கிராமத்திற்கு சென்று அங்கு உள்ள மக்களின் வாழ்வாதாரம், கல்வி நிலை, வீட்டு வசதிகள் மற்றும் சுகா தாரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ. ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் அவர்கள் இப்பகுதியில் உள்ள குழந்தைகளிடம் கல்வியின் முக்கியத்துவம் பற்றி விழிப் புணர்வு ஏற்படுத்தினார். மேலும் சமூகப்பணித்துறை மாணவர் கள் வீடு வீடாக சென்று பழங் குடி மக்களை சந்தித்து அவர் களின் வாழ்க்கை முறையை கேட்டறிந்தனர். குறிப்பாக சுகா தாரம், பள்ளி இடைநிறுத்தம் மற்றும் வீட்டு வசதிகள் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கண்டறிந்தனர். இதில் அந்த பகுதியின் கவுன்சிலர் சகிலா அவர்களும் கலந்துகொண்டு மக்களின் அடிப்படை தேவை கள் குறித்து பேசினார்.
கல்வி உரிமைச் சட்டம்
அதனைத் தொடர்ந்து கூட லூரில் உள்ள அய்லான்ட் அறக் கட்டளையில் குழந்தைகளுக் கான கல்வி உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்த ரங்கம் நடைபெற்றது. இதில் முனைவர் ஞானராஜ் உதவிப் பேராசிரியர் அவர்கள் வரவேற் புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அல்போன்ஸ்ராஜ், நிர்வாக இயக்குநர், அய்லான்ட் அறக்கட்டளை அறிமுகவுரை யாற்றினார். அதில் ஆதிவாசி மற்றும் பழங்குடியினர் சந்திக் கும் பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் நிறுவனத்தின் செயல் பாடு குறித்தும் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து முனை வர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின், இணை பேராசிரி யர், சமூகப்பணித்துறை அவர் கள் கல்வி உரிமைச் சட்டம் குறித்து சிறப்புரையாற்றினார். அதில் குழந்தைகளின் கல்வியை பேணிக்காப்பதில் பெற்றோர் கள் முக்கிய பங்கு வகிக்க வேண் டும் என்றும் அவர்களோடு தோழைமையோடு பழக வே.ண் டும் என்றார். மேலும் குழந்தை களின் கல்வியை உறுதி செய்வ தன் மூலம் அவர்களின் தலை முறையை பாதுகாக்க முடியும் என்றார். இதில் 40 க்கும் மேற் பட்ட பெண்களும் தன்னார்வத் தொண்டர்களும் கலந்து கொண்டனர். அப்பொழுது மாணவர்களும் அப்பகுதி களப் பணியாளர்களும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக ஏசுதாஸ், மேலாளர், பாம் திட் டம் அய்லான்ட் அறக்கட்டளை அவர்கள் நன்றியுரை வழங் கினார்.
மேலும் சமூகப்பணித்துறை மாணவர்களும், அய்லான்ட் அறக்கட்டளை பணியாளர் களும் அப்பகுதியில் உள்ள தேக் குபாடி கிராமத்திற்கு சென்றனர். அங்கு பாம் திட்டத்தின் உதவி யுடன் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகை யில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. அதன் புதிய பெயர் பலகை திறக்கப்பட்டது. சமூ கப்பணித்துறை ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து அங்கன்வாடி பராமரிப்பிற்கு நிதி உதவி வழங்கினார். அது மட்டுமல்லாது, ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் தோன்றி அப் பகுதி யானைகள் முகாமில் பணியாற்றி வரும் பொம்மன் மற்றும் பெல்லி இணையருக்கு பல்கலைக்கழகத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்வு
பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித்துறை மாணவர் கள் மற்றும் அய்லான்ட் அறக் கட்டளையினரும் கொதாடி என்ற பழங்குடியினர் கிராமத் திற்கு சென்று அங்கு உள்ள அங்கன்வாடியில் கொடியேற்றி 75ஆவது குடியரசு நாள் விழாவை கொண்டாடினர். இதில் சமூகப் பணித்துறை இரண் டமாண்டு மாணவி வெற்றி அவர்கள் குடியரசு நாள்விழா வரலாற்றை பற்றி உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பெரியார் மணியம்மை நிகர் நிலைப்பல்கலைக்கழகம், ஜாப் பார் டெவெலொப்மென்ட், நார்வே, அடைக்கலம் சமூக சேவை அறக்கட்டளை, புதுக் கோட்டை, வாய்ஸ் அறக்கட் டளை, திருச்சி மற்றும் அய் லான்ட் அறக்கட்டளை சார் பாக கொதாடி, தேவர்சோலை, பாதிரிமூலா மற்றும் அய்யங் கோயில் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங் களுக்கு காய்கரி விதைகள் வழங்கப்பட்டது. இதில் பூசணி, வெண்டை, கொத்தவரை, புடலை, பீர்க்கங்காய், பரங்கி, சிறு கீரை, அரைகீரை ஆகிய விதைகள் வழங்கப்பட்டது. இதில் அல்போன்ஸ்ராஜ், நிர் வாக இயக்குநர், அய்லான்ட் அறக்கட்டளை, முனைவர் ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின், இணைப் பேராசிரியர், சமூகப் பணித்துறை மாணவர்கள் மற் றும் அய்லான்ட் அறக்கட்டளை யின் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
அதிலும் குறிப்பாக அப்பகுதி மக்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் நிலத்தில் இயற்கை முறையில் விளைந்த காய்களை சமூகப்பணி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கினார். இந்த நிகழ்வின் போது பழங்குடி மக்கள் பாட்டுபாடி அனைவரை யும் மகிழ்வித்தனர். இதில் சமூ கப்பணித்துறை மாணவர்களும் அவர்களோடு இணைந்து கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
மூன்றாம் நாள் நிகழ்வு
சமூகப்பணி மாணவர்கள் இரண்டு நாட்கள் பழங்குடி கிராமங்களுக்கு நேரில் சென்று கற்றுக்கொண்டவைகள் குறித்து மதிப்பீடு மற்றும் அனு பவ பகிர்வு நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் ஆதிவாசி மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்து மாணவர்கள் தெரிந்து கொண்டனர். அது மட்டுமல்லாது, அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சி னைகள் குறித்தும் அறிந்து கொண்டனர். இந்த நிகழ்வானது பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல் கலைக்கழகத்தின்) சமூகப்பணித் துறை மற்றும் அய்லான்ட் அறக் கட்டளை சார்பாக ஒருங்கி ணைக்கப்பட்டது. இந்த கல்வி சுற்றுலாவில் முனைவர் ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின், இணை பேராசிரியர், சமூகப்பணித்துறை மற்றும் முனைவர் ஞானராஜ் உதவி பேராசிரியர் அவர்களும் மாணவர்களுடன் தங்கி இருந்து அவர்களை வழிநடத்தினர்.

No comments:

Post a Comment