அர்ச்சகர் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 29, 2024

அர்ச்சகர் ஆணை

featured image

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்ட தொடக்க விழாவில் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்யப்படுகின்றனர். அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்து சமய அற நிலையத்துறை கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

20 ஓதுவார்கள் உள்பட 158 கோயில் பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முதன்முதலாக அங்கயற்கண்ணி என்னும் பெண்ணும் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார். அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக நியமிப்பதன் மூலம் வரலாறு படைத்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புரட்சிகரமான சட்டம் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. 1970ஆம் ஆண்டு கலைஞரால் நிறைவேற்றப்பட்ட சட்டம் 51 ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைக்கு வருகிறது. பல சட்டப் போராட்டங்களை கடந்து அனைத்து ஜாதியின ரையும் அர்ச்சகராக திமுக அரசு நியமித்துள்ளது. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதன் மூலம் பெரியார், அண்ணா, கலைஞரின் கனவை நிறைவேற்றி உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

(தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்)

No comments:

Post a Comment