தேசிய கல்விக் கொள்கை, ‘நீட்’க்கு எதிராக மாணவர் அமைப்பினர் மாபெரும் பேரணி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 2, 2024

தேசிய கல்விக் கொள்கை, ‘நீட்’க்கு எதிராக மாணவர் அமைப்பினர் மாபெரும் பேரணி!

featured image

சென்னை, பிப். 2- தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர் அமைப்பினர் பேரணி நடைபெற்றது. ‘‘யுனை டெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா கூட்டமைப்பு” சார்பில் நேற்று (1-2-2024) பேரணியை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

செயின்ட் பீட்டர்ஸ் மைதானம் முதல் ராபின்சன் பூங்கா வரை மாணவர் அமைப்பினர் பேரணி நடை பெற்றது. இந்தியாவை காக்கவும், மாணவர்களின் கல்வி உரிமையை காக்கவும் பேரணியில் முழக்கமிட்டுச் சென்றனர். தி.மு.க. மாணவரணி, திராவிட மாணவர் கழகம் உள்பட 16 அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.
‘நீட்’ மற்றும் தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி மாணவர் அமைப்பு சார்பில் சென்னை ராயபுரம் செயின்ட் பீட் டர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாபெரும் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியபோது,
மாநிலத்தின் கல்வி உரிமையை மீட்கவும், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோருதல் உள் ளிட்ட 4 முக்கிய அம்சங்களை வலியுறுத்தி பேரணி நடைபெறுவதாக கூறினார். புதிய கல்வி கொள்கையை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என உறுதிபட தெரிவித்தார்.

இந்தப் பேரணியில் தி.மு.க. மாணவர் அமைப்பினர், திராவிட மாணவர் கழகத் தோழர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணியானது ராபின்சன் பூங் காவை சென்று நிறைவடைகிறது.

இந்த பேரணியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் அய்ட்ரீம்ஸ் மூர்த்தி, ஆர்.டி.சேகர், எபினேசர், திராவிடர் கழகத் துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாணவர் கழகப்பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலை தளப் பதிவில், இந்திய ஒன்றிய மாணவர்களின் உரிமைகளை காக்க, தி.மு.க. -இடதுசாரி – சிறுபான்மை யினர் இயக்கங்கள் உள்ளிட்டவற்றின் மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து “யுனைடெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா” எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்தக் கூட்டமைப்பு சார்பில், தேசியக் கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிராகவும், பாசிச பா.ஜ.க.வை மக்களவைத் தேர்தலில் வீழ்த்தவும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட “சென்னைப் பேரணி”யை, தி.மு.க. தொடங்கப்பட்ட ராயபுரத்தில் இந்திய மூவர்ணக் கொடியை அசைத்து தொடங்கி வைத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை – நீட் – இட ஒதுக்கீடு பறிப்பு- இந்தி மொழித் திணிப்பு போன்ற பா.ஜ.க.வின் பாசிச அடக்கு முறைகளை முறியடிப்போம். மிழிஞிமிகி கூட்டணியை வெல்லச் செய்வோம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment