உரத்தநாடு வடக்கு ஒன்றியம் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 4, 2024

உரத்தநாடு வடக்கு ஒன்றியம் கலந்துரையாடல்

featured image

உரத்தநாடு வடக்கு ஒன்றியம் மற்றும் நகரம் சார்பில்
ஒரு மாத காலத்திற்குள் 150 விடுதலை சந்தாக்களை திரட்டி வழங்குவது,
10க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களை நடத்துவது என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

உரத்தநாடு, பிப். 4- உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம் 1.2.2024 அன்று இரவு 7 மணியளவில் உரத்தநாடு பெரியார் மாளிகையில் நடை பெற்றது. தஞ்சை மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற் றினார்.

தஞ்சை மாவட்ட செயலா ளர் அ.அருணகிரி, மாநில கிராம பிரச்சார குழு அமைப் பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர் மா. அழகிரிசாமி, மாநில ப.க. அமைப்பாளர் கோபு.பழனி வேல், வீதி நாடக கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாநில இளை ஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.

திராவிடர் கழக ஒருங்கி ணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், இரா.குணசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி, 91 வயதி லும் இடைவிடாத சுற்றுப்பய ணம் மேற்கொண்டு கழகப் பணி சமுதாயப் பணியாற்றி வரும் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் தொண்டுக்கு பயனாக கழகத் தோழர்களின் செயல்பாடுகள் இருக்க வேண் டும் என்பதை கூறி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியை தோற் கடிப்பது நம் இலக்கு அதற்கான பணியை இப்பொழுதே செய்ய வேண்டும் என்பதை விளக்கி கூறி கருத்துரையாற்றினார்.

உரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார், உரத்தநாடு நகர தலைவர் பேபி ரே.ரவிச் சந்திரன், நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன், நகர இளைஞரணி செயலாளர் மா. சாக்ரடீஸ், கண்ணந்தங்குடி கீழையூர் கிளை கழக தலைவர் இரா.செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் நா. அன்பரசு, ஒன்றிய இளைஞ ரணி செயலாளர் சு.குமார வேலு, தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் நா.வெங்க டேசன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி செய லாளர் ராமதாஸ், தஞ்சை மாநகர செயலாளர் டேவிட், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் இரா.ராஜதுரை, மாவட்ட இளைஞரணி செய லாளர் பேபி ரெ.ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்ரமணியன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, ஆகியோர் கருத்துரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திராவிடர் கழக செயலவை தலைவர் சுயமரியாதை சுட ரொளி கடலூர் சு.அறிவுக்கரசு, திராவிடர் கழக காப்பாளர் நெய்வேலி வெ.ஜெயராமன், நெல்லுப்பட்டு இராவணன் தாயார் ஜீவரத்தினம், வடக்கிக் கோட்டை வசந்தன் தாயார் வள்ளியம்மை, சமையன்குடிக் காடு அறிவரசு தாயார் அஞ்சம்மாள், மாவட்ட ப.க. இணைச் செயலாளர் லெட்சு மணன் தாயார் தையல் ஆகி யோரது மறைவிற்கு இக்கூட் டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

புதிதாக பிரிக்கப்பட்ட உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகத்தின் புதிய பொறுப்பாளர்களுக்கு இக் கூட்டம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித் துக்கொள்கிறது.
பிப்ரவரி 3ஆம் தேதி கட லூரில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் முழுவதும் கிளை கழக கலந்துரையாடல் கூட் டங்களை நடத்தி கழக அமைப்புகளை புதுப்பிப்பது எனவும் கிளை கழகங்கள் தோறும் திராவிடர் கழக பொதுக்கூட்டங்களை நடத் துவது எனவும் தீர்மானிக்கப்படு கிறது.

உரத்தநாடு நகரத்தில் மாதம் ஒரு தெருமுனை கூட் டங்களை அனைத்து பகுதிகளி லும் நடத்துவது எனவும் நகர கழக பொறுப்பாளர்கள் இணைந்து அதற்கான ஏற்பாடு களை செய்வது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

இன உரிமை மீட்பு ஏடான விடுதலை நாளேட்டிக்கு உரத்த நாடு நகரம் மற்றும் உரத்தநாடு வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அனைத்து மக்களையும் சந் தித்து அதிகமான சந்தாக்களை திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
மாவட்ட இளைஞரணி சார்பில் பிப்ரவரி மாதத்தில் உரத்தநாடு சந்தப்பேட்டை பகுதியில் வழக்காடு மன்றம் கழக சொற்பொழிவாளர்களை அழைத்து மிக எழுச்சியோடு நடத்துவது என முடிவு செய் யப்படுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத பா.ஜ.க. கூட்டணியை தோற்கடித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணையை ஏற்று “இந்தியா” கூட்டணி வேட்பா ளர்களை வெற்றி பெறச்செய்ய அனைத்து கழக தோழர்களும் ஒன்றிணைந்து களப்பணி மற்றும் பிரச்சாரப்பணியை மேற்கொள்வது என தீர்மானிக் கப்படுகிறது.
உரத்தநாடு வடக்கு ஒன்றி யம் சார்பில் 100 விடுதலை சந்தாக்களையும், உரத்தநாடு நகரம் சார்பில் 50 விடுதலை சந்தாக்களையும் திரட்டி வழங் குவது எனவும், உரத்தநாடு ஒன்றியம் மற்றும் நகரத்தில் 10க்கும் மேற்பட்ட தெருமுனை கூட்டங்களை நடத்துவது, இவற்றை ஒரு மாத காலத் திற்குள் நிறைவு செய்வது என வும் தீர்மானிக்கப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு

ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, ஒன் றிய செயலாளர் அ.சுப்பிரமணி யன், நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், நகர செயலா ளர் பு.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பேபி ரெ.ரமேஷ், ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் சசிகுமார், ஒன்றிய இளை ஞரணி தலைவர் நா.அன்பரசு, ஒன்றிய இளைஞரணி செயலா ளர் சு.குமரவேலு, ஒன்றிய இளைஞரணி துணைச் செய லாளர் இரா.ராஜதுரை, நகர இளைஞரணி செயலாளர் மா.சாக்ரடீஸ், ஒன்றிய விவ சாய அணி செயலாளர் ராம தாஸ் ஆகியோருக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருண கிரி ஆகியோர் பயானடை அணிவித்து பாராட்டி சிறப் பித்தனர்.

விடுதலை சந்தா வழங்கல்

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சேதுராயன் குடிக்காடு மா.இராசப்பன் முதல் சந்தாவை கொடுத்து விடுதலை சந்தா திரட்டும் பணியை தொடங்கி வைத்தார்.
கலந்துகொண்டோர்
நகரத் துணைத் தலைவர் சக்திவேல், பஞ்சநதிக்கோட்டை கலைக் கழகத் தலைவர் தா.பாரதிதாசன், தெற்கு நத்தம் ஆசைத்தம்பி, லெட்சுமணன், கணேசன், சேதாரயன் குடிக் காடு மா.இராசப்பன், நெடு வாக்கோட்டை வெ.விமல் மற்றும் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment