இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி காலவரையற்ற பட்டினிப் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 25, 2024

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி காலவரையற்ற பட்டினிப் போராட்டம்

featured image

ராமநாதபுரம், பிப்.25 இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசு வரம் மீனவர்கள் காலவரை யற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினர்.

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழ்நாடு மீனவர் களுக்கு வெளிநாட்டுமீன் பிடி தடைச் சட்டத்தின் கீழ்,இலங்கை நீதிமன்றம் 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளது. இதில், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை, படகு ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண் டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தைக் கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடன டியாக விடுதலை செய்யக் கோரியும், சிறைப் பிடிக்கப் பட்டுள்ள படகுகளை விடு விக்கக் கோரியும் ஒன்றிய, மாநில அரசுகளை வலி யுறுத்தி, ராமேசுவரம் மீன வர்கள்கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளனர்.

இந்நிலையில், ராமேசு வரம் அருகே தங்கச்சிமடத் தில் மீனவர்கள் நேற்று (24.2.2024) காலவரையற்ற தொடர் பட்டினிப் போராட் டத்தை தொடங்கினர். இதில் மீனவர் சங்கத் தலைவர்கள் ஜேசு, எமரிட், சகாயம்மற்றும் மீனவர்கள், மீனவப் பெண்கள் திர ளாகப் பங்கேற்றுள்ளனர். போராட்டத்துக்கு ஆதர வாக, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, அகிலஇந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண் டோ, காங்கிரஸ் மாவட்டப் பொறுப்பாளர் ராஜாராம் பாண்டியன் உள்ளிட்டோ ரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment