இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர முயற்சி அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர முயற்சி அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தகவல்

featured image

புதுக்கோட்டை, பிப்.7 – புதுக் கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.3.56 கோடியில் கட்டப்பட்ட 58 வீடு கள் கொண்ட குடியிருப்பு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

புதிய குடியிருப்பை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிறு பான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய் யநாதன் ஆகியோர் திறந்துவைத்து, பயனாளிகளுக்கு வீட்டின் சாவி களை வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மஸ்தான் கூறியது:

தமிழ்நாட்டில் உள்ள முகாம் களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு 2 கட்டங்களாக வீடுகள்கட்ட ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்த இடங்களில், பய னாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக் கப்பட்டு வருகின்றன. இதுதவிர, 106 முகாம்களில் தங்கியுள்ளவர் களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங் கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக இலங்கையில் இருந்து முதலில் தமிழ்நாடு வந்த 200 பேரின் பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை மேற்கொள் வதற்காக சட்டக் குழுவும் அமைக் கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவர்களுக்கு விரைவில் குடியு ரிமை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் தங்கி யுள்ள இலங்கைத் தமிழ் மாண வர்கள், உயர் கல்வி பயில தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கிறது.

ஆனால், மருத்துவக் கல்லூரி யில் சேர்வதில் மட்டும் சட்ட சிக்கல் உள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும்போது, இலங்கைத் தமிழர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடிவு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment