மோடிக்கு எதிராக கருப்பு பலூன் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவருக்கு வீட்டு சிறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

மோடிக்கு எதிராக கருப்பு பலூன் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவருக்கு வீட்டு சிறை

சென்னை, பிப். 28- மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் போராட்டம் அறிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் வீட்டு சிறையில் நேற்று (27.2.2024) அடைக்கப்பட்டார். பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ் சன், கருப்பு பலூன் பறக்க விடும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை, சென்னை போரூரில் உள்ள இல்லத்தில் காவல் துறையினர் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். பிரதமர் இன்று (28.2.2024) தமிழ்நாட்டில் இருந்து திரும்பிச் செல்லும் வரை அவர் வீட்டு காவலில் வைக்கப்படுவார் என்று தெரிகிறது.
இது குறித்து எம்.பி.ரஞ்சன் குமார் அளித்த பேட்டியில் “தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி கொண்டிருக்கிறது மோடி அரசு. நிதிப்பகிர்விலிருந்து பேரிடர் நிவாரணம் வரை துரோகத்தை மட்டுமே ஒன்றிய பாஜ அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்த மோடி, தமிழ் மண்ணில் கால் பதிக்கக்கூடாது. பிரதமர் தமிழ்நாடு வரும் போது எல்லாம் இது போன்ற போராட்டம் நடத்தப் படும்” என்று தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும்: காங்கிரஸ்

அய்தராபாத், பிப். 28- காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறை வேற்றி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் பதவியேற்றார். உடனடியாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட 6 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்கான கோப்புகளில் ரேவந்த் கையெழுத் திட்டார்.

டிசம்பர் 9ஆம் தேதி அரசு பேருந்துகளில் பெண்களுக் கான இலவச பயணத் திட்டத்தை ரேவந்த் தொடங்கி வைத்தார். பிறகு ஏழைகளுக்கு ரூ.10 லட்சம் வரையில் காப்பீடு வழங்கும் ராஜீவ் ஆரோக்கிய சிறீ சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கான லோகோ மற்றும் சுவரொட்டியை வெளியிட்டார்.
தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற மேலும் 2 திட்டங்களை ரேவந்த் தொடங்கி வைத்துள்ளார். அதாவது ரூ.500-க்கு சமையல் எரிவாயு எரிவாயு வழங்கும் திட்டம் மற்றும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஆகிய 2 திட்டங்களை ரேவந்த் தொடங்கி வைத்து உள்ளார். தெலுங்கானா மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோர் இந்த திட்டங் களைத் தொடங்கி வைத்தனர்.

No comments:

Post a Comment