நாகை மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 18, 2024

நாகை மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

featured image

கழக கிளைகளைக் கட்டமைப்பது- கழகக் குடும்ப விழா நடத்துவது-
ஒன்றிய பிஜேபி அரசின் மக்கள் விரோத போக்கை தோலுரிக்கும் வகையில் தெருமுனைக் கூட்டங்களைப் பரவலாக நடத்துவது!
நாகை மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

நாகை, பிப்.18- நாகை மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் கடந்த 16.2.2024 அன்று மாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் யாழிசை திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலை மையில், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, கழகக் காப்பாளர் கி.முருகையன், தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் ஆகியோர் முன்னிலையில் எழுச்சியோடு நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், திராவிடர் கழக மேனாள் செயலவை தலைவர் சு.அறிவுக்கரசு, மேனாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் தங்கராசு, நீலப்பாடி பாலு, கொட் டாரக்குடி ஆண்டி, ஒக்கூர் ஆச்சியம்மாள், இராமா மிர்தம், திருவாரூர் மாவட்ட பழைய வலம் தேவநாதன், புதுக்கோட்டை மாவட்ட கழக காப்பாளர் பெ.இராவ ணன் ஆகியோர் மறைவிற்குக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரி விக்கப்பட்டது.
கடலூரில் 3.2.2024 அன்று நடைபெற்ற திராவிடர் கழக செயற்குழுவின் முடிவின் படியும், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் கட்டளைப் படியும், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் நமது கடமையும்! ஜனநாயக கோட்பாடு களுக்கு முற்றிலும் புறம்பாகவும், அரசமைப்பு சட்டத் திற்கு புறம்பாக மதச்சார்பின்மை – சமூகநீதி – சோசிய லிசம் என்ற அடிக்கட்டுமானத்தை தகர்க்கும் வகையிலும் தொடர்ச்சியாக மாநில உரிமைகளுக்கு எதிராகவும், ஒரே நாடு! ஒரே மொழி! ஒரே மதம்! என்று ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை செயல்படுத்தும் வகையிலும், டில்லியில் போராடும் விவசாயிகளை ஒடுக்க சர்வாதிகார போக் குடன் செயல்படும் மக்கள் விரோத பாசிச பிஜேபி தலைமையிலான கூட்டத்தை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்து இந்தியா கூட்டணிக்கு பெரும் வெற்றியை தேடி தருவதை நமது ஒரே குறிக்கோளாக கொண்டு செயல்பட இக்கூட்டம் வற்புறுத்துகிறது. முக் கியமாக தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் கட் டளை தீர்மானமாகவும் இது ஒருமனதாக நிறைவேற்றப் படுகிறது எனவும், 3.2.2024 கடலூரில் நடைபெற்ற கழக தலைமை செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை இக்கூட்டம் வழிமொழிகிறது. ஒரு மனதாக நிறைவேற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
திராவிடர் கழகத்தின் கட்டமைப்பை கிளைக் கழகங் கள் தோறும் வலுப்படுத்துவது எனவும், வருகின்ற 24.2.2024 இல் சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழக இளைஞர் அணி மாநில கலந்துரையாடல் கூட்டம் மற்றும் மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் இளைஞர் அணி நடத்தும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நடைபெற இருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், மாணவர்களை பெருமளவில் அனுப்புவது என்றும், ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் வேண்டு கோள்படி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிளைக் கழகங்கள் தோறும் மக்கள் விரோத பாஜக அரசை வீழ்த்தும் நோக்கத்தோடு தெருமுனைப் பிரச்சாரங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்களை நடத்துவது எனவும், இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த கொடுமைகளைப் போக்க ஒன்றிய பாஜக அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்துவதே இதற்கு ஒரே தீர்வு எனவும், புதியதாக மாநில திராவிடர் கழக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் நாத்திக.பொன்முடி அவர்களுக்கு வாழ்த்துகளையும், அவரது பணி சிறக்க பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள் கிறோம். நம் மாவட்ட தோழருக்கு மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பினை வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து – மாநில இளைஞரணி செய லாளருக்கு நமது மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவதெனவும், நாகை – திருமருகல் ஒன்றியத்தின் சார்பில் திருமருகலிலும், கீழ்வேளூர் – திருக்குவளை ஒன்றியத்தின் சார்பில் கீழ்வேளூரிலும், வேதாரண்யம் – கீழையூர் ஒன்றியத்தின் சார்பில் வேதாரண்யத்திலும் கழகக் குடும்ப விழாவினை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. விழாவில் நமது இயக்கத் தோழர்கள் குடும்பம், குடும்பமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரளாக பங்கேற்க வேண்டும் – முக்கியமாக மகளிர் தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்வது எனவும், டில்லியில் நடைபெறும் விவசாயி களின் போராட்டத்திற்கு நமது முழு ஆதரவினை தெரி வித்தும், விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க சர்வாதிகார போக்கோடு செயல்படும் விவசாயிகள் விரோத பாசிச பாஜக அரசையும் இக்கூட்டம் வன்மை யாகக் கண்டிக்கிறது எனவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
புதிய பொறுப்பாளர்கள்
கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா ஜெயக்குமார், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் செருநல்லூர் பாக்யராஜ், கீழ்வேளூர் நகரத் தலைவர் அ.பன்னீர்செல்வம், கீழ் வேளூர் நகர செயலாளர் ம.முத்துராஜா, கீழ்வேளூர் ஒன்றிய விவசாய அணி தலைவர் சி.தமிழரசன், வேதாரண்யம் ஒன்றிய தலைவர் தேத்தாக்குடி இரா. ராஜேந்திரன், வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் மு. அய்யப்பன், வேதாரண்யம் ஒன்றிய துணைத் தலைவர் தெ.ஆறுமுகம், வேதாரண்யம் ஒன்றிய துணைச் செயலாளர் சி.பஞ்சாபகேசன், திருமருகல் ஒன்றிய தலைவர் மு. சின்னதுரை, திருமருகல் ஒன்றிய செயலாளர் தெ. இரவிச்சந்திரன், திருமருகல் ஒன்றிய துணைத் தலைவர் ப.காமராஜ், திருமருகல் ஒன்றிய துணைச் செயலாளர் இரா.ரமேஷ், கீழையூர் ஒன்றிய தலைவர் ரெ.ரங்கநாதன், கீழையூர் ஒன்றிய செயலாளர் இரா. கோழிலிச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வே.தீபன் சக்ரவர்த்தி ஆகிய புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த மாநில பொறுப் பாளர்களான புதிதாக மாநில இளைஞரணி செய லாளராக அறிவிக்கப்பட்ட நாத்திக பொன்முடி, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பொன்.செல் வராசு, பாவா ஜெயக்குமார், மாவட்ட இணைச் செய லாளர் இராமலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் துரைசாமி, நாகை நகரத் தலைவர் செந்தில்குமார், நாகை ஒன்றிய தலைவர் கு.சின்னதுரை, திருமருகல் ஒன்றிய தலைவர் சின்னதுரை, மாவட்ட இளைஞரணி தலைவர் இராஜ்மோகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சி.சுரேஷ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செ.பாக்கியராஜ், வே.தீபன் சக்ரவர்த்தி, இரா.முத்துக் கிருஷ்ணன், ம.குணசீலன், கீழ்வேளூர் ஒன்றிய இராஜேந்திரன், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம், வேதாரண்யம் அய்யப்பன், திருமருகல் ஒன்றிய செயலாளர் ரமேஷ், கொட்டாரக்குடி ரவிச் சந்திரன், கீழ்வேளூர் முத்துராஜா, பொதுக்குழு உறுப் பினர் கமலம், அலமேலு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் கவிதா, மாவட்ட மகளிரணி தலைவர் பேபி, மருங்கூர் காமராஜ், நகர அமைப்பாளர் ரவி, கொட் டாரக்குடி தினேஷ்குமார், வடகரை குஞ்சப்பன்,
சி. தமிழரசு, இரா.தியாகசுந்தரம், தேவகி உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் நிறைவாக நாகை ஒன்றிய தலைவர்
கு. சின்னதுரை நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment