இது எப்படி இருக்கிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 23, 2024

இது எப்படி இருக்கிறது?

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து
தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவர திட்டமாம்

சென்னை, பிப். 23- சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 9 முதல் 12ஆ-ம் வகுப்பு மாணவர்க ளுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபி எஸ்இ) கீழ் நாடுமுழுவ தும் 29,009 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கை -2020 அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட பல்வேறு அம்சங்களில் மாற்றங் களை சிபிஎஸ்இ வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் 9 முதல் 12-ஆம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் (ஓபிஇ) கொண்டு வருவ தற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளி யாகியுள்ளது.
இதுகுறித்து சிபி எஸ்இ மண்டல அலுவ லர்கள் சிலர் கூறும் போது, ‘‘சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 9, 10-ஆம் வகுப்புகளுக்கான ஆங்கி லம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கும், 11, 12ஆம் வகுப்புகளுக்கான ஆங்கி லம், கணிதம், உயிரியல் பாடங்களுக்கும் புத்தகம் பார்த்துதேர்வு எழுதும் நடைமுறையைஅமல் படுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை, டில்லி உள்ளிட்ட நகரங்களில் சில பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இந்த தேர்வுகளை நவம்பர், டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முறைக் குப்பின் பெறப்படும் கருத் துகள், பகுப்பாய்வுகள் ஆகியவற்றைக் கொண்டு இத்திட்டம் அமல்படுத் தப்படும். கரோனா காலத் தில் புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடை முறையைக் கொண்டு வந்த டில்லி பல்கலைக் கழகத்திடமும் வாரியம் ஆலோசனை கேட்க உள்ளது’’ என்றனர்.

No comments:

Post a Comment