மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அரசு தூக்கியெறியப்படும் வெற்றிப்பாதையில் 'இந்தியா' கூட்டணி : பிரகாஷ்காரத் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 26, 2024

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அரசு தூக்கியெறியப்படும் வெற்றிப்பாதையில் 'இந்தியா' கூட்டணி : பிரகாஷ்காரத் உறுதி

featured image

திண்டுக்கல், பிப்.26 18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை தூக்கியெறியும் விதத்தில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் அணிவகுப்பாம் ‘இந்தியா’ அணி பெரும் உத்வேகத்துடன், உரிய அர சியல் வியூகங்களை வகுத்து நாட் டின் அனைத்து மாநிலங்களிலும் முன்னேறி வருகிறது;
‘இந்தியா’ அணியின் வெற்றியை அனைத்து தொகுதிகளிலும் உறுதி செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து ஊழியர்களும், உறுப்பினர்களும் மற்ற அனைத்துப் பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு முழு வீச்சுடன் களமிறங்குவீர் என்று பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் விரை வில் அறிவிக்கப்பட உள்ள நிலை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மற்றும் செங்கல் பட்டு ஆகிய மய்யங்களில் மாபெரும் தேர்தல் தயாரிப்பு மண்டல பேர வைக் கூட்டங்களை நடத்த தீர்மா னித்தது. அதன்படி, திண்டுக்கல்லில் கட்சியின் 22 மாவட்டக் குழுக் களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்ற பேரவைக் கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்று உரை யாற்றிய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், 10 ஆண்டு கால பாஜக ஆட்சியின் முழு வீச்சிலான எதேச்சதிகார நட வடிக்கைகளை விவரித்தார். இந்த தேர்தல் வழக்கமான ஒரு தேர்தல் அல்ல; இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த தேர்தல் எனக் குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் மோடி அரசை தூக்கி யெறியவும், தமிழ்நாடு மற் றும் கேரளத்தில் சுவடு தெரியாமல் துடைத்தெறிய வும் முழுவீச்சில் களமிறங்க வேண்டு மென கட்சியின் ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், நாடு முழு வதும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் அணி வகுப்பாக உருவெடுத்துள்ள ‘இந்தியா’ அணி அனைத்து மாநி லங்களிலும் கூட்டணியை உறுதி செய்து, தொகுதி பங்கீட்டுப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது எனக் குறிப் பிட்டார்.
“மாநிலத்திற்கு மாநிலம் அர சியல் சூழலும், நிலைமைகளும் வேறுபடுகின்றன; அதன் அடிப் படையில் ‘இந்தியா’ அணியின் கட்சிகள் பாஜக வை வீழ்த்த வியூகம் வகுத்து வருகின்றன; பீகாரில் நிதிஷ்குமாரின் துரோகத்தை உடைத் தெறிந்து ஆர்ஜேடியின் தேஜஸ்வி பல லட்சக்கணக்கான மக்களை ஈர்த்து வருகிறார்; உத்தரப்பிர தேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையில் வெற்றி கரமாக தொகுதிப் பங்கீடு நடந்து முடிந்துள்ளது; டில்லி, குஜராத், ஹரியானா, சசச;சண்டிகர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிந்துள் ளது. மற்ற மாநிலங்களிலும் ‘இந் தியா’ அணியின் பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடுகளும் மிக விரைவில் சிறப்பான முறையில் அமையும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று விவரித்த பிரகாஷ் காரத், தமிழ் நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி, அதிமுக மற்றும் பாஜக உள் ளிட்ட கூட்டாளிகளை முற்றாக வீழ்த்தும் வகையில் வலுவான தளத்தை அமைத்து முன்னேறி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் மாபெரும் அணிச் சேர்க்கையை உருவாக்கியதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு மிக முக்கியமான பங்கு உண்டு; அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஆர்எஸ்எஸ் – பாஜகவின் கொடிய ஹிந்துத்துவா கொள்கையை எதிர்த்து உறுதியுடன் நிற்க செய்வதில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னோடி யாக திகழ்கிறது; அந்த வகையில் இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதில் இடதுசாரி களுக்கு – குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதன் மையான பங்கும் பாத்திரமும் உள்ளது எனக் குறிப்பிட்ட பிரகாஷ் காரத், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பணியை நிறை வேற்ற அனைத்து தோழர்களும் முழு வீச்சில் களமிறங்குவீர் என அழைப்பு விடுத்தார்.

No comments:

Post a Comment