ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. எந்த எல்லை வரையும் செல்லும் என்பதை கற்பனைகூட செய்ய முடியவில்லை ராகுல் காந்தி சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 1, 2024

ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. எந்த எல்லை வரையும் செல்லும் என்பதை கற்பனைகூட செய்ய முடியவில்லை ராகுல் காந்தி சாடல்

featured image

புதுடில்லி, பிப்.1 நீதிமன்ற உத்தரவின்படி 30.1.2024 அன்று நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், “இந்தியா” கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு முறைப் படி நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்கு களை தேர்தல் நடத்தும் அதிகாரி எண்ணினார். இதில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் மேயர் தேர் தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனிடையே சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ள தாக காங்கிரஸ், ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு கட்சிகளும் காட்சிப் பதிவை வெளியிட்டுள்ளன.

அந்த காட்சிப் பதிவில் மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கும் முன்பு தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டு களை எண்ணும்போது அதில் ஏதோ எழுதுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அக்கட்சி சார்பில் பஞ்சாப்-அரி யானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

ராகுல் காந்தி

இந்த நிலையில், ‘ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. எந்த எல்லை வரையும் செல்லும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை’ என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“மேயர் தேர்தலில் உலகமே பார்க்கும்படி அப்பட்டமாக ஜனநாயகத்தை கொன்ற பா.ஜ.க., ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லை வரை செல்லும் என கற்பனை கூட செய்ய முடியவில்லை! பல ஆண்டுகளுக்கு முன்பு, காந் தியாரை கோட்சே கொன்ற நாளான (30.1.2024) அன்று கோட்சேவின் வாரிசுகள் காந்தியாரை கொள்கை களையும், அரசமைப்பின் மாண்புகளையும் படுகொலை செய்துள் ளனர்.”

-இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment