பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.366 கோடியில் கொள்ளிடம்-காவிரி கூட்டுக் குடிநீர்த்திட்டம் அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஆ.இராசா நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.366 கோடியில் கொள்ளிடம்-காவிரி கூட்டுக் குடிநீர்த்திட்டம் அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஆ.இராசா நன்றி

featured image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.366 கோடியில்
கொள்ளிடம்-காவிரி கூட்டுக் குடிநீர்த்திட்டம்
அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஆ.இராசா நன்றி தெரிவிப்பு

சென்னை,பிப்.24- பெரம்பலூர் மாவட் டத்திற்கு ரூ.366 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் – காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வை சென்னையில் உள்ள முகாம் அலுவல கத்தில் சந்தித்து, மக்களவை உறுப்பினர் ஆ.இராசா நன்றி தெரிவித்தார்!
பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உடன் இருந்தனர்!
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்க ளின் வாழ்வாதாரமான குடிநீர் தட்டுப் பாடு நீண்ட காலமாக இருந்து வந்தது.

கடந்த 1996-2001 -ஆம் ஆண்டுகளில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி யில் இருந்து வெற்றி பெற்று ஒன்றிய அமைச்சராக இருந்த ஆ.இராசா அவர்களின் பரிந்துரையை ஏற்று,
பெரம்பலூர் மாவட்டத்திற்கு கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் (1996-2001) அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் காவேரி_-கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.120 கோடி யில் அறிவிக்கப்பட்டு, கொள்ளிடத்தில் இருந்து தண்டாரக்கோறை எனுமிடத் தில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு பூவாளூர், தச்சங்குறிச்சி, சிறுகனூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு வந்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி மக்கள்தொகையின் வளர்ச்சி அதிக மடைந்துள்ளதால், குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டும், மேனாள் ஒன்றிய அமைச் சர் மக்களவை உறுப்பினர் ஆ.இராசா கோரிக்கை வைத்ததை முன்னிட்டும்,
பெரம்பலூர் நகராட்சிக்கும், எறை யூர் மற்றும் பாடலூரில் அமைந்துள்ள சிப்காட்களுக்கும் சேர்த்து ரூ.366 கோடியில் கொள்ளிடம் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ,கே.என்.நேரு அவர்களை, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில், மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி., சந்தித்து நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment