3500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மின்சார கார் ஆலை ரூபாய் 16 ஆயிரம் கோடியில் உருவாகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 26, 2024

3500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மின்சார கார் ஆலை ரூபாய் 16 ஆயிரம் கோடியில் உருவாகிறது

featured image

3500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மின்சார கார் ஆலை
ரூபாய் 16 ஆயிரம் கோடியில் உருவாகிறது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி, பிப்.26 வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென் னையில் கடந்த ஜனவரி 7, 8-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது, வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்திஆலை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இதையடுத்து, தூத்துக்குடி அருகே சில்லாநத்தம் சிப்காட் தொழிற் பூங்காவில் தொழிற்சாலை அமைப் பதற்காக இந்நிறுவனத்துக்கு 408 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், தென் தமிழ்நாட்டின் முதலாவது மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையான வின்ஃபாஸ்ட்தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (25.2.2024) அடிக்கல் நாட்டினார்.

விழாவுக்கு வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி பாம் சான் சாவ் தலைமை வகித்தார். திட்டம் குறித்து தமிழ்நாடு தொழில், வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கினார்.

சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்,மீன்வளத் துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் வின் ஃபாஸ்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி பாம் சான் சாவ் கூறியதாவது: தமிழ்நாடு அர சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த 50 நாட்களுக்குள் தொழிற்சாலை அமைப் பதற்கான பணிகளை தொடங் கியுள் ளோம். மொத்தம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறோம். முதல் கட்ட பணிகள் ரூ.4 ஆயிரம்கோடியில் நடைபெறும். இதில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தூத்துக்குடி ஆலையில் இருந்து முதலாவது மின் சார கார் 2025ஆ-ம் ஆண்டின் மத்தி யில் உற்பத்தியாகி வெளியே வரும்.
வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி: இங்கு உற்பத்தியாகும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் சில வசதிகள் தேவைப்படுகிறது. பெரிய கப்பல்கள் வந்துசெல்லும் அளவுக்கு வசதிகள் செய்ய வேண்டும்.
மின்சார கார்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200முதல் 400 கி.மீ. தூரம் வரைசெல்லும். கார்களுக்கான பேட்டரியை வீடுகளிலும், வெளியே உள்ள மய்யங்களிலும் சார்ஜ் செய்ய லாம்.இந்தியாவில் மின்சார கார் பேட் டரிகளை சார்ஜ் செய்யும் மய்யங்களை அதிக அளவில் அமைக்க, மற்ற நிறுவ னங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.துறைமுகம், விமான நிலையம், மனிதவளம், தமிழ் நாடு அரசின் ஆதரவு போன்றவை சிறப்பாக இருப்பதால், தொழிற் சாலையை தூத் துக்குடியில் அமைக்க முடிவு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், சட்டப்பேரவை தலை வர் அப்பாவு, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மனோ தங்கராஜ். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப் பினர்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், சி.சண்முகையா, ஊர்வசி செ.அமிர்த ராஜ், தமிழ்நாடு தொழில், வர்த்தக துறை செயலர் வி.அருண் ராய், வழி காட்டி நிறுவன மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு, சிப்காட் மேலாண் இயக்குநர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி,வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவன துணை தலைமை செயல் அதிகாரிகள் ஹோங் காங் தாங், நுகென் டாங்குவாங் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment