பணம் படைத்தவர்கள் செலுத்தும் வரி 30 சதவீதம் பாமர மக்கள் செலுத்தும் வரி 60 சதவீதம் சு.வெங்கடேசன் எம்.பி., சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 6, 2024

பணம் படைத்தவர்கள் செலுத்தும் வரி 30 சதவீதம் பாமர மக்கள் செலுத்தும் வரி 60 சதவீதம் சு.வெங்கடேசன் எம்.பி., சாடல்

featured image

மதுரை, பிப்.6- மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொட்டாம் பட்டியில் ரூ.4.90 கோடி மதிப்பி லான புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணியினை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் மா.சவு.சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். இதனைத்தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். அவருக்கு மக்களின் சார்பாக நன்றி. வரும், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே தற் போது ஒன்றிய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல தமிழ்நாட்டிற்கு எந்த அறிவிப்பும் இல்லை. இரண்டு பெரும் வெள்ள அபாயத்தை சந்தித் துள்ள போதும் தமிழ் நாட்டிற்கு எந்த நிதியும் அறிவிக்கப்பட வில்லை. பணம் படைத்தவர்கள் வெறும் 30 சதவீதம் வரியாக கொடுத்துள்ள நிலையில், அடித் தட்டு மக்கள் 60 சதவீதம் வரியாக செலுத்தியுள்ளனர். இதன் மூலம் மக்களிடம் இருந்து பணத்தைப் பறிக்கும் வேலையைத் தான் ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகின் றது. இந்தியாவில் 15 எய்ம்ஸ் மருத் துவமனைகள் கட்டி இருப்பதாக ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். அதோடு ஓர் ஒற்றைச் செங்கலையும் கட்டி இருப்பதாக நாங்கள் கூறி இருக்கின்றோம். இந்திய நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்திய அரசமைப்பு சாசனத்தை தகர்க்கின்ற வேலையை ஒன்றிய பாஜக அரசு செய்துக் கொண்டிருக் கின்றது. இதனை இந்திய மக்கள் விட மாட்டார்கள். வரும் நாடா ளுமன்ற தேர்தலில் ‘இந்தி யா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’’ என்று கூறினார்.

No comments:

Post a Comment