கலைஞர் நினைவிடம் வரும் 26 ஆம் தேதி திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 23, 2024

கலைஞர் நினைவிடம் வரும் 26 ஆம் தேதி திறப்பு

சென்னை, பிப்.23 அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்கள் 26.2.2024 அன்று திறக்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சி உறுப்பினர் களும் பங்கேற்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத் துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று (22.2.2024) கேள்வி நேரத்தின் போது, ஆயிரம்விளக்குத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் நா.எழிலன், ‘‘வள்ளுவர் கோட்டத்தை சீரமைக் கும் பணி எப்போது முடிவடை யும்?’’ என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: அ.தி. மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகள் பாழ்பட்டு கிடந்த நிலையில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும், வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த வகையில், ரூ.80 கோடியில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பார் வையாளர்கள் பார்ப்பதற்கும், கூட்டஅரங்கை பொதுவான நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, கலையரங்கம், குறள்மாடக் கூரை, தரை புதுப்பித்தல், தூண்கள், நுழைவுவாயில் உள்ளிட்ட சீர் படுத்தும் பணிகள் நடந்து வரு கின்றன. திட்டமிட்டபடி, வரும் 2025 ஜூன் மாதம் பணிகளை முடிக்கவேண்டும். இருப்பினும் முன்கூட்டியே பணிகள் முடிக் கப்பட்டு, முதலமைச்சரால் திறக் கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து, நா. எழிலன், ‘‘கலைஞர் நினைவிடம் எப்போது திறக்கப்படும்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற, நவீன தமிழ் நாட்டை உருவாக்கிய தலைவர் கலைஞரின் நினைவிடம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. கலைஞர் நினைவிடம் மட்டுமல்ல, பேரறிஞர் அண்ணாவின் நினை விடமும் சீரமைக்கப்பட்டு, புதுப் பிக்கப்பட்டுள்ளது. அண்ணா, கலைஞர் நினைவிடங்கள் பிப்ரவரி 26-ஆம் தேதி இரவு 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளன.
இதை விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்த முடிவெ டுத்துள்ளோம். அதனால், அழைப்பிதழ் அச்சிடவில்லை. அவையில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமை கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். அதில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுக்கி றேன். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

No comments:

Post a Comment