கடவுளர் காப்பாற்றவில்லை பாவம் போக்க கங்கையில் நீராடச் சென்ற 22 பேர் விபத்தில் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 25, 2024

கடவுளர் காப்பாற்றவில்லை பாவம் போக்க கங்கையில் நீராடச் சென்ற 22 பேர் விபத்தில் பலி

featured image

கஸ்கஞ்ச், பிப். 25 உத்தரபிரதேசத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகினர்.
மகா பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று (24.2.2024) கங்கை நதியில் நீராட ஏராளமானோர் குவிந்தனர். உத்தரப்பிரதேசம் கஸ்கஞ்ச் மாவட்டத் தில் பக்தர்களை ஏற்றி கொண்டு டிராக்டர் டிராலி சென்று கொண் டிருந்தது. இதில் அதிகளவில் பெண்கள், குழந்தைகள் சென்றனர். பாட்டியாலி – தரியவ்கஞ்ச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற ஒரு வாகனத்தை டிராக்டர் ஓட்டுநர் முந்தி செல்ல முயன்றுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய டிராக்டர் அங்கிருந்த 8 அடி ஆழ குளத்தில் விழுந்து விபத்துக் குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு குழுவினர் அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகி விட்டனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து சாமியார் முதல மைச்சர் ஆதித்யநாத் தன் ட்விட்டர் பதிவில், “கஸ்கஞ்ச் சாலை விபத்து குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு என் இரங்கல். காய மடைந்தவர்களுக்கு முறையான இல வச சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம், காயமடைந்த வர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அளிக் கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment