கோவையில் 2026 ஜனவரியில் நூலகம் திறப்பு வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் பதில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 23, 2024

கோவையில் 2026 ஜனவரியில் நூலகம் திறப்பு வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் பதில்

featured image

சென்னை, பிப்.23 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல அல்லாமல், கோவையில் வரும் 2026 ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் (21.2.2024) பட்ஜெட்கள் மீதான விவாதத்தின் போது, பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் நூலகம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இந்நிலை யில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வின் நேற்றைய (22.2.2024) பதிலுரையை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:

நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத் தில் பங்கேற்று உரையாற்றிய உறுப் பினர்களுக்கு தெளிவாக, விளக் கமாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்திருப்பது பாராட்டுக் குரியது. ஆனால், பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் வைத்த கோரிக் கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டு விட்டார் என்று எனக்குப் புரியவில்லை. கோவை யில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அது எங்கே அமைய விருக்கிறது, எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள், எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள், எப்போது அந்தப் பணிகள் முடிவடை யும் என்று வானதி சீனிவாசன் கேட்டிருந்தார்.

அது நிச்சய மாக உடனடியாக செயலாக்கத்துக்கு வரும். ஏனெனில், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும். குறிப் பிட்ட காலத்துக்குள்… மதுரையில் எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக் கிறதோ, சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட் டுள்ளதோ, சில நாள்களில் கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதே போல கோவை நூலகமும் நிச்சயம் அமைக்கப்படும்.
மேலும், மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டதைப் போல இல்லா மல், குறிப்பிட்ட காலத் துக்குள் கட்டி முடிக்கப்படும். 2026 ஜனவரி மாதத்தில் கோவையில் நூலகம் திறக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment