இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒன்றிய பா.ஜ. அரசு திட்டம் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 29, 2024

இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒன்றிய பா.ஜ. அரசு திட்டம் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

விருதுநகர், ஜன.29 இட ஒதுக்கீட்டை படிப்படியாக ஒழிக்க வேண்டுமென்பது தான் ஒன்றிய பாஜ அரசின் திட்டமாக இருக்கிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள் ளார். விருதுநகரில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் நேற்று (28.1.2024) நடத்தப்பட்ட கருத் தரங்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண் டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பல்கலைக்கழக மானியக் குழு அறிக் கையில், உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான பணியிடங்களுக்கான நேர்காணலில் தகுதியானவர்கள் வர வில்லை என்றால் அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்படலாம் என தெரிவித்து இருப்பதை கண்டிக்கிறோம். படிப்படியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டுமென்பது தான் ஒன்றிய பாஜ அரசின் திட்டமாக இருக்கிறது. ஏற்கனவே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களில் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பேரா சிரியர்களாக வருவது அபூர்வமாகி விட்டது’ என்றார்.

கராத்தே, நடனத்துக்கு 3 விழுக்காடு
இட ஒதுக்கீடு கோரிக்கை

தாம்பரம்,ஜன.29- சிலம்பம் கலையை கற்றவர் களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதுபோல், கராத்தே, நடனம் கற்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நட வடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
தாம்பரத்தில் ஜே.கே.ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட் டங்களி லிருந்து சுமார் 800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜே.கே.ஷிட்டோரியோ 6 mathfrak R பள்ளியின் தலைவர் ரென்ஷி டி.ஜெய்குமார், சண்டைப் பயிற்சி இயக்குநர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜாகுவார் தங்கம் கூறும்போது, “இன்றைய குழந்தைகள் செல்போனுக்கும், போதைப் பொருட்களுக்கும் அடி மையாக உள்ளனர். கராத்தே, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்பதன் மூலம் அவர்களை நல்வழிப்படுத்த முடியும். சிலம்பம் கற்றவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங் கப்படுவதுபோல், கராத்தே நடனம் கற்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment