ஆன்மிகம் அல்ல -ஆபத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 28, 2024

ஆன்மிகம் அல்ல -ஆபத்து!

இந்துக்களே ஒன்று கூடுங்கள் என்கிற முழக்கம் கிறிஸ்தவர்களை எதிர்ப்பதிலும் இஸ்லாமியர்களை ஒழிப்பதிலும் அரசியலில் வாக்குகளை சிதறாமல் பிஜேபி பெறுவதிலும் மட்டுமே இந்த முழக்கம் அனைத்து இந்துக் களையும் ஒன்று சேர்க்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்துக்களே நாம் எல்லோரும் சமம் நம்மிடம் இருக்கக்கூடிய ஜாதி வேற்றுமைகள் ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் நீக்கப்பட வேண்டும். சகோதர உணர்வோடு எல்லோரும் கோயிலின் உள்ளே நுழைய வேண்டும் தீண்டாமை ஒழிக்கப்பட வேண் டும் என்கிற உன்னதமான கோட்பாடு களோடு இந்த முழக்கத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள இந்த நிலையில் ராமன் கோவிலை பாபர் மசூதி இருந்த அந்த இடத்தில் கட்டி எழுப்பி ஜெய் சிறீ ராம் என்கிற முழக்கத் தோடு இந்திராஷ்டம் அமைய வேண்டும் என்கிற பாசிச உணர் வோடு முழுமை பெறாத ஒரு கட்டடத்தை ராமன் கோவில் என்ற பெயரால் திறந்து வைத்து மக்களி டையே கலவரத்தை உண்டாக்கலாமா? ராமன் ஒரு கடவுள் அவனை எல்லா மக்களும் வணங்குகிறார்கள் என்று மட்டும் இருந்தால் இந்த நிகழ்வு இத்தனை பெரிய விவாதமாக பேசப்பட்டு இருக்காது ஆனால் ராமன் – விநாயகர் இருவரையும் வைத்து ஆர்.எஸ்.எஸ். பிஜேபி மிகப்பெரிய அரசியல் ஆதாயம் தேடி வருகிறது.. எப்பொழுது கடவுள், மதம் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். உள்ளே நுழைகிறதோ அப் பொழுது அது ஆன்மீகமாக இருக்காது இருந்ததுமில்லை மிகப் பெரிய கலவரத்தைத் தூண்டுவதற்கான அடித்தளமான ஆபத் தாக மட்டுமே இருக்கும்.

இந்துராஷ்டிர அமைய வேண்டும் என்று விரும்பக்கூடிய அறியாமையில் இருக்கக்கூடிய பல்வேறு தரப்பினரும் ஒன்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண் டும். இந்துராஷ்டிர அல்லது ராம ராஜ்ஜியம் என்பது ஸநாதன அடுக்குகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும். மீண்டும் பல்லாயிரம் ஆண்டுகள் நாம் பின்னோக்கி நகர்த் தப்படுவோம், தாழ்த்தப்படுவோம்! ஒரு தரப்பினர் ஒடுக்கப்படுவார் சிறுபான்மையினர் நசுக்கப்படுவர் பெண்கள் மூலையிலே முடக்கப்படுவர். தந்தை பெரியார் நமக்கு எதை பெற்று தந்தாரோ அண்ணல் அம்பேத்கர் நமக்கு எதை போராடி பெற்றுத் தந்தாரோ அதை எல்லாம் நாம் இழந்து அடி மைப்பட்டு கிடக்கிற நிலை ஏற்படக்கூடிய அபாயம் இப்பொழுது எழுந்திருக்கிறது. தோழர்களே கடவுளை வணங்குவது உங்களது உரிமை; அந்த ஆன்மீகத்தை ஒருபோதும் நாங்கள் தவறு என்று கூறியது இல்லை யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்காதே! உன் புத்திக்கு எது சரி என்று படுகிறதோ அதை ஏற்று அதன் வழி நட என்று தந்தை பெரியார் சொன்னார் அந்த அடிப்படையில் இன்றைக்கு உங்களி டத்திலே ஒன்றைச் சொல்லுகிறோம். ஆன் மீகம் வேறு ஆர்எஸ்எஸ் செய்யக்கூடிய அரசியல் என்பது வேறு – சிந்தித்து செயல் படுவோம். வருகின்ற நாடாளுமன்ற தேர் தலில் ஒன்றுக்கூடி உரக்கச் சொல்வோம். ஆன்மீகம் வேறு அரசியல் வேறு..
பிஜேபியே நீ வெளியேறு

– மோ.மோகன் ராஜ்
திராவிடமாணவர் கழக
காரை மண்டலத் தலைவர்

No comments:

Post a Comment