பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ்.சினரை நியமிப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ்.சினரை நியமிப்பதா?

featured image

அறவழியில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்
அடாவடியில் கேரள ஆளுநர்

திருவனந்தபுரம்,ஜன.30- கேரள மாநிலத்தில் பல்கலைக்கழகங்களில் சங் பரிவார ஆட்களை நியமித்த தற்கு எதிராக சுமார் 50 இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்அய்) தொண்டர்கள் கேரள மாநில ஆளுநர் ஆரிப் கானை எதிர்த்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் கண்டனம்
கேரள மாநில ஆளுநரின் ஆண வத்துக்கு கேரளம் அடிபணியாது என்று பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்தார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளைச் சிதைத்து, ஆட்சி யாளர்களுக்கும், கேரளத்தின் பெருமைக்கும் களங் கம் ஏற்படுத்த முயல்பவரை எப்படி எதிர்கொள்வது என்றும் அமைச்சர் கேட்டார்.
பிரபல வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப்பை குண்டர் என்று ஆளுநர் அவமதித்துள்ளார்
உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் மற்றும் அவரது தந்தை பிரபல வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன் மீது வசைபாடியதையும் பார்த் தோம். கேரள முதலமைச்சர்மீது அவர் காட்டும் அணுகுமுறையை பார்த்தால் எந்த மலையாளியாவது ஆளுநரிடம் பேச முடியுமா? ஆளுநரின் நீண்டகால அணுகு முறைகளை மறந்துவிட்டு அவரு டன் தொடர்பு கொள்ள முடியாது.
குடியரசு தின உரையில், ஒன்றிய அரசை புகழ்வதில் அதிக நேரத்தை ஆளுநர் செலவிட்டார். மாநில அரசின் சாதனைகள் குறித்து ஆளுநர் மிகக் குறைவாகவே குறிப் பிட்டுள்ளார். ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தலின்படி செயல்படுவதாக சந்தேகிப்பது தவறல்ல. அங்கு அதற்கான ஏற் பாடுகள் தயார் செய்யப்பட்டுள் ளதையும் அமைச்சர் வி.சிவன்குட்டி சுட்டிக் காட்டினார்.

ஆரிப் கான் நாடகமும்
இசட் பாதுகாப்பும்
கருப்புக்கொடி காட்டிய எஸ்.எப்.அய். மாணவர்களை கைது செய்ய வலியுறுத்தி மைதானத்தில் அமர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் போராட்டத்தில் ஈடுபட்டார்.
எஸ்.எப்.அய். போராட்டக்காரர் களுக்கு காவல்துறை ஒத்துழைப்ப தாகக் கூறி, கோபமடைந்த ஆளுநர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அழைத்து இந்த விவகாரத்தை பிரதமரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரினார்.
சட்டத்தை மீறுபவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள், நீங்கள் குற்றவாளிகள் என்று காவல்துறையினரை கடிந்து கொண்டார். மேலும், எஸ்.எப்.அய். ஊழியர்களை தெருக்களில் தானே எதிர் கொள் வேன் என்றும் ஆளுநர் கூறினார்.
பல்கலைக்கழகங்களில் சங் பரிவார ஆட்களை நியமித்ததற்கு எதிராக சுமார் 50 எஸ்எப்அய் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
அவர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனிடையே மாணவர் போராட் டத்தை காரணம் காட்டி ஆளுநர் கானுக்கு ஒன்றிய பாஜக அரசு இசட் பிளஸ் பாதுகாப்பை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment