அயோத்தியில் ராமன் கோயில் குடமுழுக்கு அன்று கொல்கத்தாவில் மத நல்லிணக்க ஊர்வலம் முதலமைச்சர் மம்தா அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 18, 2024

அயோத்தியில் ராமன் கோயில் குடமுழுக்கு அன்று கொல்கத்தாவில் மத நல்லிணக்க ஊர்வலம் முதலமைச்சர் மம்தா அறிவிப்பு

featured image

கொல்கத்தா, ஜன.18 அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற இருக்கும் 22-ஆம் தேதி அன்று மேற்கு வங்கம் முழுவதும் மத நல்லிணக்கப் பேரணி நடத் தப்படும் என்று அம்மாநில முதல மைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்த அவர் , மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், விழா என்பது அனை வருக்குமானது.

வரும் 22ஆ-ம் தேதி மேற்கு வங் கத்தில் பேரணி நடைபெறும். மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான காளி கோயிலுக்கு சென்ற பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அங்கிருந்து பேரணி தொடங்கும். இந்தப் பேரணி அனைத்து மதங் களையும் இணைப்பதாக இருக்கும். பல்வேறு மதங்களைச் சேர்ந்த வர்களும், கோயில்கள், தேவா லயங்கள், குருத்வாராக்கள், மசூ திகள் ஆகியவற்றுக்குச் செல் வார்கள். இந்தப் பேரணி தெற்கு கொல்கத்தாவின் சர்க்கஸ் மைதானத்தில் நிறைவு பெறும். அதனை அடுத்து அங்கு பொதுக் கூட்டம் நடைபெறும். அனைத்து மதங்களும் சமமானவையே. எனவே, இந்தப் பேரணியில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள். விழாக்கள்தான் மக்களை ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொருவரோடும் நாம் பேசக்கூடிய தருணம் அது. என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment