பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 28, 2024

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

featured image

புதுச்சேரியில் 35 மாணவர்களுடன்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்று வகுப்பெடுத்தார்

புதுச்சேரி, ஜன. 28- புதுச்சேரி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை புதுச்சேரி நாடார் நலவாழ்வு சங்கம் திருமண மண்டபத்தில் இன்று (28.1.2024) மிக எழுச்சியுடன் நடை பெற்றது.
திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் தி. இராசா அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.
புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
புதுச்சேரி மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் வே. அன்பரசன் தலைமையேற்று உரையாற்றினார்.
மாநில இளைஞரணி செய லாளர் நாத்திக.பொன்முடி, மாவட்டச் செயலாளர் கி.அறிவழகன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கு.ரஞ்சித்குமார், பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, விடு தலை வாசகர் வட்ட செயலா ளர் ஆ.சிவராசன், பகுத்தறிவா ளர் கழக மாவட்ட செயலாளர் ப,குமரன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.மு. தமிழ் செல்வன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ச.பிரபஞ்சன், மேலால் மாவட்ட தலை வர் தியாகு, மாவட்டத் தொழி லாளர் அணி தலைவர் வீர. இளங்கோவன், மாவட்டத் துணைத் தலைவர் குப்புசாமி, திருக்குறள் சண்முகம், தன்னு ரிமை இயக்க பொறுப்பாளர் சடகோபன், புதுச்சேரி நக ராட்சி வடக்கு பகுதி தலைவர் ஆறுமுகம், வில்லியனூர் கொம்யூன் தலைவர் உலக நாதன் புலவர் கலியபெருமாள், குமாரமங்கலம் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்.
பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி தந்தை பெரியார் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத் தார்.
திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் எழுத் தாளர் வி.சி. வில்வம், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்.
திராவிடர் கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப் பாளர் முனைவர் க. அன்பழகன் சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் பார்ப்பன பண்பாட்டு படை எடுப்புகள் என்ற தலைப் பில் வகுப்பெடுத்தார்.
பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் மாலை வரை பெரியாரியல் பயிற்சிப் பட் டறை நடைபெற்றது.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியா ரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக் குமார் நிகழ்வை ஒருங்கி ணைத்து நடத்தினார்.

No comments:

Post a Comment