இரண்டே நிமிடத்தில் உரையை முடித்த ஆளுநர்: கேரள சட்டமன்றத்தில் பரபரப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 25, 2024

இரண்டே நிமிடத்தில் உரையை முடித்த ஆளுநர்: கேரள சட்டமன்றத்தில் பரபரப்பு

featured image

திருவனந்தபுரம், ஜன.25 கேரள சட்ட மன்றக் கூட்டத் தொடரில் இரண்டே நிமிடத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையை நிறைவு செய்தார். இதனால் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள அரசுக்கும், கேரள ஆளுநராக உள்ள ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. கேரள மாநில அரசை பொதுவெளியில் ஆரிப் முகமது கான் கடுமையாக விமர்சித்து வருகிறார். தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநருக்கு எதிராக கேரளா அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இதற்கிடையே இந்தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (25.1.2024) தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்குவது வழக்கம். அதன் படி இன்று காலை ஆளுநர் ஆரிப் முகமது கான், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது உரையை தொடங் கினார். 62 பக்கம் கொண்ட கொள்கை உரையின் 136 பத்திகளில், நேரடியாக கடைசி பக்கத்தை திருப்பிய ஆளுநர், ”இப்போது கடைசி பத்தியை படிக்கிறேன்” எனக் கூறி அதை மட்டும் வாசித்துவிட்டு உரையை முடித்து அமர்ந்தார்.
அதன்பிறகு, ‘தேசிய கீதம்’ இசைக் கப்பட்டது; அது முடிந்ததும், ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். இந்த முழு காட்சிகளும் 5 நிமிடங்களுக் குள் நடந்தது. அதிலும் சரியாக 9.02 மணிக்கு உரையை துவக்கிய ஆளுநர் ஆரிப் முகமது கான், 9.04க்கு உரையை முடித்தார்.
வெறும் இரண்டே நிமிடத்தில் ஆளு நர் உரையை முடித்ததால் சட்டமன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

No comments:

Post a Comment