வருந்துகிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 28, 2024

வருந்துகிறோம்

விடுதலை சிறுத்தைகள் மாநாட்டுக்கு சென்று திரும்பிய கட்சித் தோழர்கள்
சாலை விபத்தில் உயிரிழப்பு

விருத்தாசலம்,ஜன.28- கட்சி மாநாட்டுக்குச் சென்று விட்டு திரும்பிய போது நேரிட்ட சாலை விபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 20 பேர், திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ள வேனில் சென்றனர்.

மாநாடு முடிந்த பின்னர் புறப்பட்ட அவர்கள் 27.1.2024 அன்று விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சிதம்பரம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள நாரையூர் கிராமம் அருகே சென்றபோது, திடீரென எதிரே வந்த சரக்கு லாரி மீது, வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில்சிதம்பரத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் (28), உத்திரக்குமார் (29) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் யுவராஜ் (17) என்பவர் உயிரிழந்தார்.

மற்றவர்களில் 6 பேர்பலத்த காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கும், ஒருவர்விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கும் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 11 பேரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த அன்புச்செல்வன், உத்திரக்குமார், யுவராஜ் ஆகியோரது உடல்கள் உடற்கூராய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து வேப்பூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அய்யப்பனை நம்பி மோசம்!
சபரிமலை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பக்தர்களை காணவில்லையாம்

பம்பை, ஜன.28- கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலைக்கு வந்து தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உள்பட 9 அய்யப்ப பக்தர்கள் காணவில்லை யாம், அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

சபரிமலையில் நடந்து முடிந்த மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்செய்ய 5 வந்தனர் அவர்களில் கடந்த -நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் கடந்த 20ஆம் தேதி வரை பம்பை. நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் இருந்து அய்யப்ப பக்தர்கள் மாய மானதாக பம்பை காவல்நிலையத்தில் புகார்கள் பதிவானது.

தமிழ்நாடு. திருவள்ளூரை சேர்ந்த ராஜா (வயது 39), திருவண்ணாமலை, தண்டராம்பட்டுவை சேர்ந்த ஏழுமலை (வயது 57), சென்னையை சேர்ந்த கருணாநிதி (வயது 58), விழுப்புரத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது24) உள்பட 9 பேர் காணாமல் போயுள்ளனர்.

காவல்துறையினர் வழக்கு

காணாமல் போனவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 4பேர் ஆவர். மேலும் ஆந்திராவை சேர்ந்த 2 பேர், கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து தலா ஒருவர் வீதம் காணாமல் போயுள்ளனர். இதுதொடர்பாக பம்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள், பத்தனம் திட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ரான்னி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பம்பை காவல் நிலையம் ஆகியவற்றில் விவரம் தெரிவிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநில அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞராக முத்துக்குமார் அரசு பிளீடராக எட்வின் பிரபாகர் நியமனம்

சென்னை,ஜன.28- கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிபொறுப்பேற்றதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு ப்ளீடராக பி.முத்துக்குமார் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் பதவி உயர்வில் தற்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே சிறப்பு அரசு ப்ளீடராக பதவி வகித்த ஏ.எட்வின் பிரபாகர் பதவி உயர்வில் மாநிலஅரசு ப்ளீடராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

கூடுதல் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப் பட்டுள்ள பி.முத்துக்குமார், இதற்கு முன்பாக மாநில அரசு ப்ளீடராக பணியாற்றியபோது மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய பாடலில், மேனாள் முதலமைச்சர் கலைஞர் திருத்தங்கள் செய்து அதை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்ததை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசுக்காக ஆஜராகி அதை தள்ளுபடி செய்ய வைத்தது, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசுவிதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு என பல வழக்குகளிலும், திறமையாக வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment