சமூகநீதி- சமதர்மம் - மதச் சார்பற்ற ஒன்றிய அரசை அமைப்போம்: முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 14, 2024

சமூகநீதி- சமதர்மம் - மதச் சார்பற்ற ஒன்றிய அரசை அமைப்போம்: முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து

featured image

சென்னை, ஜன.14 தை திருநாளான பொங்கல் திருநாள் நாளை 15ஆம் தேதி கொண்டாடப் பட இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல மைச்சர் வெளியிட்டுள்ள அறிக் கையில், உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டு திரு விழாவாக பொங்கல் நன்னாள் கொண்டாடப்படுகிறது.திமுக நிர்வாகிகள், பொதுமக்களின் பங்கேற்புடன் சமத்துவ பொங்கல் என பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். அனைத்து மதத்தினரும், ஜாதி யினரும் கலந்துகொள்ளும் சமத் துவ பொங்கலாய் இது அமைய வேண்டும். ஆரிய பண்பாட்டு தாக்கமின்றி, திராவிடர்களாம் தமிழர் பண்பாட்டின் கொண் டாட்டம் தான் பொங்கல் திரு நாள்.

உழுது விளைவித்து அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கிப் பொங்கல் வைத்து, அந்த விளைச் சலுக்குக் காரணமான இயற்கை ஆற்றலாம் சூரியனுக்கும், உழவுக் குத் துணையாய் இருந்த கால் நடைகளுக்கும் நன்றி செலுத்துகிற நன்னாள். எனவே, இனி பொங்கல் இந்திய பொங்கல் ஆகட்டும். அனைவரது இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள். அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.பொங்கல் தரும் ஊக்கத்தோடு, நமக்கு காத்திருக்கும் பணிகள் இரண்டு, முதலில் தாய் தமிழ்நாட்டை மேம்படுத்துவது. சமூகநீதி, சமதர்ம, மதசார்பற்ற ஒன்றிய அரசை அமைப்பது இரண்டாவது, இந்த இரண்டை யும் அடைய எந்நாளும் பாடு படுவோம். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தனித்தனியாக பாரம்பரிய விளை யாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளை வழங்க வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசின் அடிப் படை கோட்பாடு. நான்தான் எல்லாம் என்கிற போக்கில் செயல்படுகிற ஆட்சி அதிகாரம் ஜனநாயகத்திற்கு சீர்கேடு. இந்த சீர்கேட்டை அகற்றி, ஜனநாயகம் மலர மாநில உரிமைகளை மதிக் கும் ஒன்றிய அரசு 2024 தேர்தலுக்கு பின் அமைய வேண்டும். கூட் டாட்சி தத்துவத்தின் அடிப் படையில் செயல்படக்கூடிய ஒன்றிய அரசு 2024 தேர்தலுக்கு பின் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment