திருச்சியில் நடைபெற்ற மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்

featured image

திருச்சி, ஜன. 26- திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 24-.1-.2024 அன்று மாலை 5.30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட மாணவர் கழக செயலாளர் கருப்பு.கோகுல் வரவேற்புரை வழங்கினார்.பல் கலைக்கழக மாணவர் கழக மாநில அமைப்பாளர் ஆ.அறிவுச்சுடர் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ், மாவட்ட மாணவர் கழக தலைவர் க.சசிகாந்த்,மாவட்ட இளைஞரணி தலைவர் பி. தேவா, மாவட்ட இளைஞரணி செயலா ளர் சு.மகாமணி, மாநில இளைஞ ரணி துணை செயலாளர் அரிய லூர் அறிவன், சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில துணை அமைப்பாளர் அ. திராவிட செல் வன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.பல்கலைக்கழக மாணவர் கழக மாநில அமைப் பாளர் ஆ.அறிவுச்சுடர் தீர்மானம் வாசித்தார்.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண் டியன் திராவிட மாணவர் கழக வரலாறு, தற்போதைய கல்வியில் உள்ள சிக்கல்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பு மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதி நடை பெறுகின்ற மாணவர் கூட்ட மைப்பு மாணவர் பேரணி, அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெறவுள்ள தமிழர் தலைவர் அவர்கள் பங்கேற்கும் திராவிட மாணவர் கழக சிறப்பு கருத்தரங்கம் பற்றி விளக்கி உரை யாற்றினார். திராவிட மாணவர் கழக க.குமரேசன் நன்றியுரை வழங்கினார். கூட்டத்தில் தனலட் சுமி சீனிவாச கல்லூரி மாணவர்கள் விமல்ராஜ், அணீஸ், ஷைஜி, ஹரி, மா.நடராசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் மறை வுக்கு இக்கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு இரங்கல் தெரிவிக் கப்பட்டும், 1.2.2024 அன்று காலை சென்னையில் நடைபெற உள்ள யுனைடெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் (திஷிளி) மாணவர் கூட்டமைப்பின் சார்பில் மாணவர் பேரணி மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி மாலை சென்னையில் திரா விட மாணவர் கழகத்தின் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் பங்கேற்கும் சிறப்பு கருத்தரங் கத்தில் திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள், திராவிடர் கழக தோழர்கள் பெருந் திரளாக கலந்து கொள்வது என வும்,
திருச்சியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் திராவிட மாணவர் கழகத்தை உருவாக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment