சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 25, 2024

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

எனக்கு ஹிந்தி தெரியாது
அய்.பி.சி., சி.ஆர்.பி.சி. என்று தான் குறிப்பிடுவேன்!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

சென்னை, ஜன.25- இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிஷ்யா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்துள்ளது.
இந்த பெயர் மாற்றம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி இந்த புதிய சட்டங்கள் இந்தாண்டு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க் கப்படுகிறது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில் உள்ள சில பிரிவு களைத் தவிர்த்து வேறு எந்த மாற்றமும் செய்யப்படாமல் அவற்றின் பெயர்கள் மட்டுமே இந்தியில் மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் குற்ற வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேசன் குற்றவியல் சட்டத்தின் காலவரம்பு குறித்து அரசு வழக்குரை ஞரிடம் கேள்வி எழுப்பினார். புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள சட்டங்களின் பெயரை அரசு வழக் குரைஞர்களால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. அப்போது நீதிபதி, குற்றவியல் சட்டங்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்திருந்தாலும் எனக்கும் இந்தி தெரியாது என்பதால் பழைய பெயர்களிலேயே அய்.பி.சி., சி.ஆர்.பி.சி. என தொடர்ந்து குறிப் பிடுவேன் என கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment