சட்டம் இதனை அனுமதிக்கிறதா? காரில் தொங்கியபடி தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய மோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 1, 2024

சட்டம் இதனை அனுமதிக்கிறதா? காரில் தொங்கியபடி தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய மோடி

featured image

அயோத்தி, ஜன.1 அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை அரசியல் ஆதாயப் பொருளாகவும், மக்களவைத் தேர்தல் பிரச் சாரத்தின் ஒரு பகுதியாகவும் மாற்ற பாஜக தீவிர மாக முயற்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு முன்ன தாகவே தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.

ராமர் கோவில் அமைந்து இருக்கும் அயோத்தியில் வளர்ச்சிப் பணி என்ற பெயரில் ரூ.15,700 கோடி மதிப் புள்ள திட்டங்களை பிரதமர் மோடி 30.12.2023 அன்று தொடங்கி வைத் தார். ரூ.1,450 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட உள்ள மகரிஷி வால்மீகி பன்னாட்டு விமான நிலையம், ரூ.240 கோடி செலவில் மறுசீர மைக்கப்பட்ட “அயோத்தி தாம்” சந்திப்பு ரயில் நிலை யம், இரண்டு புதிய அம்ரித் பாரத் ரயில்கள், 6 புதிய “வந்தே பாரத் ரயில்கள்” உள்ளிட்ட வைகளை மோடி திறந்து வைத்தார். திட்டங்களை துவக்கி வைத்தப் பின் பிரதமர் மோடி அயோத்தியில் சாலை மார்க்கமாக “ரோடு ஷோ” சென்றார். அதுவும் எஸ்பிஜி வீரர்கள் போல காரில் வெளிப்புறமாக தொற் றிக் கொண்டு கையசைத்த வாறே பிரதமர் மோடி மக் களவைத் தேர்தல் பிரச்சா ரத்தை அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவிற்கு முன்பே தொடங்கி விட்டார்.

காவி வண்ண தொப்பி களை மாணவர்களுக்கு அணிவித்து மோடி ஷூட் டிங் அயோத்தி நலத்திட் டங்கள் என்ற பெயரில் 2 புதிய அம்ரித் பாரத் ரயில்கள், 6 புதிய “வந்தே பாரத் ரயில்கள்” என 8 ரயில்களை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக காவி வண்ணத்தில் உருவாக்கப் பட்டு இருந்த “அம்ரித் பாரத்” ரயிலுக்குள் சென்ற மோடி மாணவர்களை வைத்து தனி ஷூட்டிங் செட் ஏற்பாடு செய்து இருந் தார். அதாவது மாணவர் களுக்கு காவி தொப்பிகளை அணிய வைத்து அவர்களி டம் ஒரு துண்டுச் சீட்டை கொடுத்து அதனை படிக்க வைத்து பிரதமர் மோடி சொல்வதை மாண வர்கள் கேட்பது போல ஷூட்டிங் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment