ஒன்றிய அரசின் புதிய ஆணை அரசு பெண் ஊழியர் மரணம் அடைந்தால் கணவருக்கு பதிலாக குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 4, 2024

ஒன்றிய அரசின் புதிய ஆணை அரசு பெண் ஊழியர் மரணம் அடைந்தால் கணவருக்கு பதிலாக குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம்

புதுடில்லி,ஜன.4- திருமண விவகாரம் சர்ச் சையில் இருந்தால், அரசு பெண் ஊழியர் தனது மரணத்துக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவ ருக்கு பதிலாக தனது குழந்தையை நியமிக் கலாம் என்று ஒன்றிய அரசு விதி முறை திருத்தம் கொண்டு வரப் பட்டுள்ளது.

மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிமுறைகள், 2021-இன் 50ஆவது விதி முறைப்படி, ஓர் அரசு ஊழியரோ அல்லது ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற அரசு ஊழியரோ மரணம் அடைந்தால், அவரது வாழ்க்கை துணைக்கு (கணவன் அல்லது மனைவி) ஓய்வூதியம் வழங்கப்படு கிறது.
ஒருவேளை அந்த வாழ்க்கை துணைக்கு தகுதி இல்லாவிட்டாலோ அல்லது அவரது மரணத்துக்கு பிறகோ அவர்களின் குழந்தைகள், வரிசை அடிப்படையில் குடும்ப ஓய்வூ தியம் பெற தகுதி பெறுவார்கள்.

இந்நிலையில், அரசு பெண் ஊழியர், தனது கணவருக்கு பதிலாக தனது குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க செய்யலாம் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை திருத்தம் செய்துள்ளது.

இதுகுறித்து அத்துறை வெளியிட் டுள்ள ஆணையில் கூறப்பட்டிருப்ப தாவது, கணவருக்கு எதிராக விவா கரத்து வழக்கு தாக்கல் செய்த பெண் ஊழி யர்கள்,
தங்கள் கணவருக்கு பதிலாக தங்கள் குழந்தையை குடும்ப ஓய்வூ தியம் பெற நியமிப்பதற்கு அனுமதிக் கலாமா என்று கேட்டு பல்வேறு அமைச்சகங்களிடம் இருந்து எங்களுக்கு கடிதங்கள் வந்தன.

அதன் அடிப்படையில் இந்த திருத்தத்தை கொண்டு வந்துள்ளோம்.

அதன்படி, கணவருக்கு எதிராக பெண் ஊழியர் தொடர்ந்த விவா கரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவை யில் இருந்தாலோ. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின்கீழ் கணவருக்கு எதிராக அவர் புகார் அளித்திருந் தாலோ, அத்தகைய பெண் ஊழியர்கள் தங்கள் மரணத்துக்கு பிறகு கணவருக்கு பதிலாக தங்கள் குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்குமாறு தங்கள் துறை தலைவரிடம் எழுத்துப் பூர்வமாக எழுதி கொடுக்கலாம்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment