குஜராத் பிஜேபி ஆட்சியின் இலட்சணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 24, 2024

குஜராத் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்

வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 14 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், விபத்து தொடர்பாக 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே, விபத்தில் சிக்கிய படகில் 27 மாணவர்களை பயணம் செய்ததாக வதோதரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.கோர் தெரிவித்துள்ளார். ஹார்ணி என்ற ஏரியில் படகு கவிழ்ந்துள்ளது. படகில் பயணித்த மாணவர்களை தேடும் பணி நிகழ்விடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது; வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஹார்ணி ஏரிக்கு ஜன.18 அன்று மாணவர்கள் சுற்றுலா நிமித்தமாக வந்துள்ளனர். இந்தச் சூழலில் 27 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணம் செய்த படகு ஏரியில் கவிழ்ந்துள்ளது.

இதில் 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், 14 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்புப் படை மற்றும் தீயணைப்புப் படையினர் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியின் அடிப்பகுதியில் சேறுகள் இருப்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வதோதரா நகராட்சி நிலைக்குழுவின் தலைவர் ஷீத்தல் மிஸ்திரி கூறு கையில், “படகில் சுமார் 35 பேர் இருந்தனர். ஒருவேளை படகின் அளவைத் தாண்டி அதிகளவு ஆட்களை ஏற்றி இருக்கலாம் என்றார்.

இதனால், படகு சமநிலையை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் படகில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேபோல், விபத்து குறித்து பேசியுள்ள மற்ற அதிகாரிகளும், “மாண வர்களும் ஆசிரியர்களும் லைஃப் ஜாக்கெட் அணியவில்லை” என்கின்றனர். இந்நிலையில் இந்த கோரவிபத்து தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, “வதோதரா படகு விபத்து சம்பவத்தில் 14 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த உடனே ஆட்சியர் காவல்துறை ஆணையர், நகராட்சி ஆணையர் மற்றும் 60க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்புக் குழு (NDRF) மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க முதலமைச்சர் விரைவான விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார். அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆஜர்படுத்தப் பட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய 9 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன” என்று கூறினார்.

எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பள்ளி நிர்வாகம் சுற்றுலாவிற்கு அனுமதி பெற்றுள்ளதா என்றும், பள்ளிக் குழந்தைகள் சவாரி செய்வதற்கு முன் படகில் பாதுகாப்புக் கருவிகள் உள்ளதா என சோதிக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி அவரது மாநிலத்தில் நடந்த இந்த கோர விபத்து குறித்தும் இறந்த வர்களுக்கு அரசு உதவிகள் குறித்தும் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். (குஜராத் மாநிலம் அல்லவா!) கடந்த ஆண்டு மோர்பி என்ற பாலம் விழுந்து நூற்றுக்கும் மேற் பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டும் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உயிரிழந் துள்ளனர். குஜராத் அரசு நிர்வாகத்தின் மோசமான நடவடிக் கைகளால் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இது போன்ற விபத்து பிஜேபி ஆளாத வேறு மாநிலங்களில் நடந்திருந்தால் பிரதமர், உள்துறை அமைச்சர், பா.ஜ.க. சங்கிகள் எவ்வளவு குதி குதித்திருப்பார்கள்.
இந்த விபத்து முதல் தடவையல்ல; கடந்த ஆண்டும் இது போன்ற ஒரு விபத்து ஏற்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். என்றாலும் எதனால் அந்த விபத்து ஏற் பட்டது என்று தெரிந்த நிலையிலும், போதிய பாதுகாப்பு விதிகள், கருவிகள் இல்லாத நிலை குஜராத் பிஜேபி ஆட்சி நிர்வாகத்தில் தொடர்வது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்.

No comments:

Post a Comment