பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு திட்டம் காவல்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 21, 2024

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு திட்டம் காவல்துறை அறிவிப்பு

featured image

சென்னை, ஜன.21 போக்குவரத்து காவல் துறை சார்பில் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (20.1.2024) நடை பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 67 பள்ளி களைச் சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். சாலை பாதுகாப்பை வலி யுறுத்தும் விதமாக பல் வேறு கருப்பொருள்களை மய்யப்படுத்தி மாண வர்கள் அதன் மாதிரி வடிவமைப்பை காட்சிப் படுத்தி யிருந்தனர். சிறந்த மாதிரி வடிவமைப்புக் கான முதல் பரிசு பெற்ற ஆதம்பாக்கம் டிஏவி பள்ளி மாணவிகள் அஹன்யா, ஹன்சிகாவுக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ரூ.50,000 வழங் கிப் பாராட்டினார்.

சென்னை காவல்துறை

சென்னை காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பு திட்டம் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.

சென்னை போக்கு வரத்து காவல்துறை மற் றும் போக்குவரத்து வார் டன் சார்பில் போக்கு வரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று (20.1.2024) நடந் தது. இந்நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகளை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கருப்பொருளை மய்யப்படுத்தி, அதன் மாதிரி வடிவமைப்பை பள்ளி மாணவர்கள் காட் சிப்படுத்தி இருந்தனர். இதனைகாவல் ஆணை யர் சந்தீப் ராய்ரத்தோர் பார்வையிட்டு மாணவர் களிடம் கலந்துரையாடி னார். தொடர்ந்து சிறப் பான வடிவமைப்பு செய்த ஆதம்பாக்கம் டிஏவி பள்ளிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், சவுகார் பேட்டை பாதல்சந்த் சாயர்சந்த் சோர்டியா ஜெயின் வித்யாலயா மெட்ரிக் பள்ளிக்கு இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரமும், அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு மூன் றாம் பரிசாக ரூ.10 ஆயிர மும் வழங்கினார்.

விழிப்புணர்வு

இதையடுத்து சென்னை போக்குவரத்து காவல் துறையில் பொது மக்களுக்கு சிறப்பான போக்கு வரத்து விழிப் புணர்வுகளை ஏற்படுத் திய வேப்பேரி போக்கு வரத்துகாவல் ஆய்வாளர் பாண்டிவேலுக்கு பரிசு வழங்கினார்.

No comments:

Post a Comment