ஆட்டிசம் பாதித்த மகளுடன் சேர்ந்து கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பாசத்தாய் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

ஆட்டிசம் பாதித்த மகளுடன் சேர்ந்து கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பாசத்தாய்

featured image

ரெஜிமோள் தனது மகளின் வெற்றிக்கு தடை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் உறுதி யாக இருந்தார். அந்த முடிவோடுதான் ரெஜிமோள் செவிலியர் வேலையை விட்டு விட்டு ஆட்டிசம் பாதித்த மகள் ஆன்மேரி-யுடன் சீருடையில் கல்லூரிக்குத் திரும்பினார்.

ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்டுள்ள தனது மகள் ஆன்மேரியின் படிப்பிற்கு உதவுவதற்காக ரெஜிமோள் தனது 49 ஆவது வயதில் கல்லூரியில் சேர்ந்து படித்து வரு கிறார். ஆன்மேரி அமலகிரி பி.கே.கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் அட் மிஷன் பெற்ற ஆன்மேரி கல்லூரி சூழலை எப்படி சமாளிப்பார் என்று ரெஜிமோள் கவலைப்பட்டார். அவள் கல்லூரியில் படிக்க ஆரம்பித்ததும் அம்மா கல்லூரி வாசலில் மணிக் கணக்கில் காத்திருந்தார்.
ஆனால், ரெஜி மோள் மகளுடன் இருக்கவும், கற்பிக்கவும், ஊழியம் செய்யவும் ஆசைப்பட்டார்.

ரெஜிமோளின் விருப்பத்தை தோழி யான ஆசிரியர், கல்லூரி நிர்வாகத்திடம் தெரி வித்தார். முதல்வர் டாக்டர். மின்னி தாமஸின் ஆதரவுடன், ரெஜிமோள் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் இந்த கல்வியாண்டில் புவியியல் பட்டதாரி மாணவியாக கல்லூரியில் சேர்ந்தார். ரெஜிமோள் தனது மகளுடன் ஆறு மாதங்களாக படித்து வருகிறார். சீருடை அணிந்து ரெஜிமோள் தனது மகளுடன் ஸ்கூட்டரில் கல்லூரியை அடைவார்.

மகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அடுத்த வகுப்பறையில் தாய் இருப்பதாக நம்புகிறார். ரெஜி மோளின் கணவர் பாபு 12 ஆண்டுகளாக அபுதாபி யில் சர்வேயராக பணியாற்றி வருகிறார். ஆன்மேரியின் சகோதரர் சிரியாக் எஸ்.எப்.எஸ் பள்ளி பிளஸ் 1 மாணவர். சிரியாக்கை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ரெஜி கல்லூரிக்கு செல்கிறார். இது தான் எங்களின் உலகம் என்றும், இங்கு வந்தவுடன் கவலைகள் அனைத்தையும் மறந்து விடுவோம் என்றும் ரெஜிமோள் கூறுகிறார்.

No comments:

Post a Comment