கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு பிப்ரவரி 9ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 7, 2024

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு பிப்ரவரி 9ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பு

featured image

உதகை, ஜன. 7- கோட நாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பிப். 9ஆ-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் டில் 2017இ-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளைய டிக்கப்பட்டன.
இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.
மேற்கு மண்டல காவல் கண்காணிப்பா ளர் தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து விசா ரணை நடத்தப்பட்டது.
பின்னர் இந்த வழக் கின் விசாரணை சிபிசி அய்டி-க்கு மாற்றப்பட் டது. கோவை சிபிசிஐடி கூடுதல் துணை ஆணை யர் முருகவேல் விசா ரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடை பெற்றது. இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு மாவட்ட நீதிமன் றத்தில் 5.1.2024 அன்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஅய்டி தரப்பில் வழக்குரைஞர் ஷாஜ கான், கூடுதல் துணை ஆணையர் முருகவேல் உள்ளிட்டோர் ஆஜரா கினர்.

குற்றம்சாட்டப்பட்ட வாளையாறு மனோஜ், சயான், உதயகுமார் ஆகி யோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கில் குற்றவாளிக ளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 அலை பேசி உரையாடல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 8,000 பக்கம் கொண்ட அறிக் கையைப் படிக்கவும், மேலும் பலரிடம் விசா ரணை நடத்தவும் கால அவகாசம் தேவைப்படு கிறது.
எனவே, கூடுதல் அவ காசம் தருமாறு சிபிசி அய்டி காவல் துறையினர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை யடுத்து, இந்த வழக்கை வரும் பிப். 9ஆ-ம் தேதிக்கு தள்ளிவைத்து மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment