மோடி ஆட்சியில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் சரிவு முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 8 லட்சம் கோடி இழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 24, 2024

மோடி ஆட்சியில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் சரிவு முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 8 லட்சம் கோடி இழப்பு

மும்பை, ஜன.24 நிதி, வங்கி மற்றும் ஊடக பங்குகளின் கடும் சரிவினால் செவ்வாய்க்கிழமை வர்த்தக நேரத்தின் இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு காரணமாக (22.1.2024) நேற்று முந்தைய நாள் விடுமுறைக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று (13.1.2024) மீண்டும் தொடங்கியது. உலகளாவிய சந்தைகளின் சாதகமான நிலை, வலுவான மூன்றாவது காலாண்டு வருவாய் போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் காலை வர்த்த கத்தை ஏற்றத்துடனேயே தொடங் கின. சென்செக்ஸ் 444 புள்ளிகள் உயர்ந்து 71,868.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 144 புள்ளிகள் உயர்ந்து 21,716.70 ஆக இருந்தது. இந்திய பங்குச் சந்தை முதல் முறையாக ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளதாக வந்த ப்ளூம்பெக் அறிக்கையால் லாபம் அதிகரித்தது.

இந்தநிலையில், சோனி நிறுவனம் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனது இணைப்புத் திட்டத்தை திரும்பப் பெற்றதால், ஜீ என்டர்டயின்மென்ட்டின் பங் குகள் 33 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதனால் ஊடகப் பங்குகள் வீழ்ச் சியைச் சந்தித்தன. இது பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தாலும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகளின் தொடர் சரிவு காரணமாக ஹெவிவெயிட் வங்கி மற்றும் நிதிப் பங்குகளின் சரிவு காரணமாக பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந் தன. வர்த்தக நேர நிறைவின்போது மும்பை பங்குச்சந்தையில் சென் செக்ஸ் 1053.10 புள்ளிகள் வீழ்ச்சி யடைந்து 70,370.55 ஆக இருந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை யில் நிஃப்டி 333.00 புள்ளிகள் வீழ்ந்து 21,238.80 ஆக இருந்தது. தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை சன்பார்மா இன் டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், அய்சிஅய்சிஅய் பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. இன்டஸ் இன்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஜெஎஸ்ட பில்யூ ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட் ரீஸ், அய்டிசி, எம் அண்ட் எம், என்டிபிசி, விப்ரோ, டெக் மகேந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக் னாலஜிஸ், டைட்டன் கம்பெனி, கோடாக் மகேந்திரா பேங்க், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சி யடைந்திருந்தன.

No comments:

Post a Comment