சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் 38 நாடுகள் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 4, 2024

சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் 38 நாடுகள் பங்கேற்பு

featured image

சென்னை, ஜன.4 சென்னை புத்தகக் காட்சியை நேற்று (3.1.2024) தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து மடலை வாசித்தார். அதில் கூறியுள்ளதாவது:
தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதே நேரம் 47-ஆவது புத்தகக் காட்சி பெரும் வெற்றியை பெற எனது வாழ்த்துகள். பபாசிக்கு பாராட்டுகள்.
இந்தாண்டு பன்னாட்டு புத்தகக்காட்சி சென் னையில் ரூ.6 கோடியில் ஜன. 16, 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதில் 38 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதற்காக 20 இலக்கிய முகவர்களை பயிற்சி தந்து உருவாக்கியுள் ளோம். இவர்கள் எழுத்தாளர் களுக்கும், வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங் களுக்கும் பாலமாக இருப்பார்கள்.
இதுதவிர, இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்கு விக்கும் வகையில் இந்தாண்டு முதல் இளைஞர் இலக்கியத் திரு விழாவும் நடத்தப்பட உள்ளது. நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தை பள்ளியிலேயே மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய சிந்தனைகளை கல்லூரி மாண வர்களிடம் உரு வாக்க வேண்டும். இவை தமிழ்ப்பற்றை உருவாக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment