2024 மக்களவைத் தேர்தலில் ஒன்றிய பிஜேபி அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் வைகோ பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 2, 2024

2024 மக்களவைத் தேர்தலில் ஒன்றிய பிஜேபி அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் வைகோ பேட்டி

featured image

சென்னை,ஜன.2- வரும் 2024 நாடா ளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை மக்கள் நிச்சயம் தூக்கி எறிவார்கள் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நம் பிக்கை தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆங்கில புத்தாண்டை யொட்டி நேற்று (1.1.2024) பத்திரி கையாளர்களை சந்தித்தார். அப் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பன்முகத்தன்மையை சிதைக்கிறது

பா.ஜனதா அரசு 2014 ஆட் சிக்கு வந்தது முதல் ஜனநாயகத் துக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின்படி நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து வருகிறது.

அரசமைப்பு சட்டத்தின் விழு மியங்களை சிதைத்து வரும் பா. ஜனதா அரசு ஒட்டு மொத்த அதி காரத்தையும் டில்லியில் குவித்து சர்வாதிகார ஆட்சி நடத்தி வரு கிறது. காஷ்மீரில் 370ஆவது பிரிவை அடியோடு அகற்றி நம்பிக்கை மோசடியை செய்துள்ளது.

மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேசிய இனங்களின் தனித்தனி இன, மொழி, பண்பாட்டு அடை யாளங்கள் அழிக்கப்பட்டு வரு கின்றன.
எதிர்காலத்தில் ஜனநாயகத்தை காக்க முடியுமா? மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலை யில், பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இந்தியா கூட் டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணி சுமுகமாக செயல்பட்டு வருகிறது.
மக்கள் தூக்கி எறிவார்கள்

2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை நிச்சயம் மக்கள் தூக்கி எறிவார்கள் – இந்தியா கூட் டணி அரசு நாடு முழுவதும் மக் கள் சக்தியை திரட்டி பா.ஜன தாவை வீழ்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

டில்லியில் பிரதமரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.21.ஆயிரத்து 600 கோடி தேவை என்று தெரிவித்தார். ஆனால், ஒன் றிய அரசு ரூ.450 கோடியை ஒதுக்கி உள்ளது. இது போதுமானது அல்ல. மாநில அரசு கேட்டுள்ள நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.
உத்தரபிரதேசம், மத்திய பிர தேசம், பீகார், ராஜஸ்தான் உள் ளிட்ட மாநிலங்களுக்கு வரிப் பகிர்வு நிதியை அள்ளி வழங்கி உள்ள ஒன்றிய அரசு தமிழ் நாட்டுக்கு கிள்ளித் தருகிறது.
பா.ஜனதா ஆளும் உத்தரப்பிர தேசத்துக்கு ரூ.13 அயிரம் கோடியை வழங்கி உள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு வெறும் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாயை வழங்கி உள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டபோது அய்.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவுக்கு தற்போது பதவி உயர்வு வழங்குவதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை.

எனவே, அவருக்கு பதவி உயர்வு வழங்குவதை தமிழ்நாடு அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா. பொருளாளர் செந்தில திபன் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment