பொங்கல் விழாவுக்கு 19,484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் சிவசங்கர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 9, 2024

பொங்கல் விழாவுக்கு 19,484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் சிவசங்கர் தகவல்

featured image

சென்னை, ஜன. 9- பொங்கல் விழாவை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் சென்னையில் 6 இடங்களிலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறி யுள்ளார். பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள் சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்கப் படும்.
இதன்படி,சென்னையிலிருந்து பொன்னேரி, கும்மி டிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர்மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் கலைஞர் நகர் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலி ருந்து இயக்கப்படும்.
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோ ணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து வழித்தடப் பேருந்து களும் தாம்பரம்சானடோரியம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந் துகள் வள்ளுவர் குருகுலம் மேல் நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்திலிருந்தும், பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய் யாறு, ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பேருந் துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்திலிருந்தும் இயக்கப்படும்.

முன்பதிவு மய்யங்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தலா 5 முன்பதிவு மய்யங்களும், தாம் பரம் மெப்ஸ் பேருந்து நிலையத் தில் ஒரு முன்பதிவு மய்யமும் என மொத்தம் 11 முன்பதிவு மய்யங்கள் செயல்படும். வரும் 12ஆ-ம் தேதிமுதல் 14ஆ-ம் தேதி வரை காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை இந்த முன்பதிவு மய்யங்கள் செயல்படும்.
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள் வதற்கும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு வசதியாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைப்பேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள் ளலாம்.

அதிக கட்டண புகார்
மேலும், ஆம்னி பேருந்துக ளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்க ளுக்கு 1800 425 6151 என்ற கட் டணமில்லா தொலைப்பேசி எண்ணிலும் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைப்பேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதுமட்டுமின்றி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
பொதுமக்களின் வசதிக்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 5 பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏது வாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.

No comments:

Post a Comment