பிஜேபி ஆட்சியின் சாதனை? அலுவலகங்களில் பணியமர்த்தல் கடந்த டிசம்பரில் 16% வீழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

பிஜேபி ஆட்சியின் சாதனை? அலுவலகங்களில் பணியமர்த்தல் கடந்த டிசம்பரில் 16% வீழ்ச்சி

featured image

புதுடில்லி,ஜன.13-தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் பிற துறை களில், கடந்த டிசம்பரில் அலுவலக பணிக் கான பணியமர்த்தல், 16 சதவீதம் குறைந் துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை வேலைவாய்ப்பு நிறுவனமான ‘நவுக்ரி ஜாப் ஸ்பீக்’ வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவித்திருப்பதாவது:
தகவல் தொழில்நுட்பம், பி.பி.ஓ., கல்வி, சில்லரை வர்த்தகம் மற்றும் சுகா தாரத் துறைகளுக்கான பணி யாட்கள் தேர்வுகள், உலக நில வரத்தை முன் னிட்டு எச்சரிக்கை உணர்வுடன் மேற் கொண்டதை யடுத்து, அலுவலக பணியாளர் பணி யமர்வு, முந்தைய ஆண்டை விட, கடந்த மாதம் 16 சதவீதம் குறைந் துள்ளது.

No comments:

Post a Comment