எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றிய நிலையில் குற்றவியல் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 21, 2023

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றிய நிலையில் குற்றவியல் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

புதுடில்லி, டிச.21 திருத்தப்பட்ட குற்ற வியல் சட்ட மசோதாக்கள் கடந்த 20.12.2023 அன்று மக்களவையில் நிறை வேற்றப்பட்டன.
நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே அவை யில் அதிக அளவில் இருந்த நிலையில், இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து அமலில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங் களுக்கு மாற்றாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய மூன்று திருத்தப்பட்ட சட்ட மசோ தாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித் ததால் நாடாளுமன்ற நிலைக் குழுவின் (உள்துறை) பரிசீலனைக்கு அனுப்பப் பட்டன.
இக்குழு, சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் அளித் தது. இந்தப் பரிந்துரை அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்கள வையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மூன்று மசோதாக்களும் நாடாளு மன்ற மக்களவையில் நேற்று (20.12.2023) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பெருமளவிலான எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய் யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்களே அவையில் அதிக அளவில் இருந்தனர்.

இந்த மசோ தாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டன.
இந்த மசோதாக்கள் மீதான விவாதத் தின்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தற்போதுள்ள இந்திய குற்ற வியல் சட்டங்களின் நோக்கம் தண்டிப்பது தானே தவிர, நியாயம் வழங்குவது அல்ல. புதிய மசோதாக்கள் சட்டமாகும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும். தற்போதைய சட்டங்களைக் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், இந்தி யாவை தங்கள் காலனி ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கும் நோக்கில் கொண்டு வரப் பட்டவை. புதிய சட்டங்களைப் பொறுத்த வரை அவை தண்டனை வழங்குவதை விட, நியாயம் வழங்குவதாக இருக்கும்” என கூறினார்.
முன்னதாக, அவையில் பதாகை களைக் காண்பித்து அமளியில் ஈடுபட்ட சி.தாமஸ், ஏ.எம். ஆரிப் ஆகிய நாடாளு மன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யவேண்டும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர் மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் இடைநீக்கம் செய் யப்பட்டனர்.
இந்த திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் ஏற்கெனவே நடைமுறை யில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறவும், அதற்கு மாற்றாக அமல்படுத்தவும் வகை செய்கின்றன. அய்பிசி-க்கு மாற்றாக தாக்கல் செய்யப் பட்டுள்ள பாரதிய நியாய (2 ஆவது) சன் ஹிதா மசோதாவில், கும்பலாகச் சேர்ந்து கொலை செய்வோருக்கு குறைந்தபட்சம் ஆயுள் அதிகபட்சம் மரண தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுபோல் ஒவ்வொரு சட்டத்திலும் குற்றங்களுக்கு தண்டனை கள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment