மாடு மேய்க்கும் பெண்ணால் "மிரண்ட" கேசிஆர்.. தெலங்கானாவை அதிர செய்த பரேலக்கா.. திரும்புகிறது வரலாறு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 5, 2023

மாடு மேய்க்கும் பெண்ணால் "மிரண்ட" கேசிஆர்.. தெலங்கானாவை அதிர செய்த பரேலக்கா.. திரும்புகிறது வரலாறு

அய்தராபாத், டிச.5 அந்த வேட் பாளர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில், பேங்க் அக்கவுண்ட் வெறும் ரூ.1,500 என்பதை அறிந்து அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள்.. யார் அந்த வேட்பாளர் தெரியுமா? இவரை பற்றிதான் தெலங்கானா முழுக்க பேச்சாக இருக்கிறது. சிறீஷா என்பது அந்த பெண் வேட்பாளரின் பெயர்.. 25 வயது பிகாம் பட்டதாரி.. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ், மற்றும் காங் கிரஸ், பாஜக என்ற பிரமாண் டமான தேசிய கட்சிகளுக்கு நடு வில் புயலென நுழைந்து, வேட் பாளராக அறிமுகமாகி, மொத்த தெலங்கானாவையும் தன்பக்கம் திரும்ப செய்துள்ளார் சிறீஷா.

சிறீஷா: தொகுதி மக்கள் இவரை "பரேலக்கா" அதாவது மாடு மேய்க்கும் பெண் என்று செல்லமாக அழைக்கிறார்கள்.. நாகர்கர்னூல் மாவட்டம் கொல்லப்பூர் தொகுதியில் இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார் இந்த சிறீஷா. அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையோ, பணத்தை மூட்டை மூட்டையாக சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசையோ இவருக்கு இல்லை.. தேர்தலில் இவரை "போட்டியிட வைக்கும்படியான சூழலை உரு வாக்கியிருப்பது, 10 ஆண்டுகள் மாநிலத்தை ஆண்ட கேசிஆர்தான். 

குடிகார அப்பா: வறு மையான பின்னணியில் பிறந்த இந்த பெண்ணின் அப்பா., ஒரு மொடா குடிகாரர்.. குடித்து குடித்தே குடும்பத்தை அழித் தவர்.. கொஞ்ச நஞ்சமிருந்த நிலத்தையும் அடமானம் வைத்து குடித்தவர். அந்த நிலத்தை மீட்க, எத்தனையோ பேரின் காலில் விழுந்து கதறினார் சிறீஷா.. வேலை கிடைத்துவிட்டால், தன் னுடைய குடும்பத்தை காப்பாற்றிவிடலாம் என்ற ஒரே நம்பிக் கையுடன் போராடினார்..

வேலைக்காக எத்தனையோ இடங்களில் முயற்சித்துள்ளார்.. பல கம்பெனிகளுக்கு மனு போட்டுள்ளார்.. க்ரூப் மிமி,, க்ரூப் மிமி, மிமிமி,மற்றும் மிக்ஷி போன்ற தேர்வு களை எழுதியும் காத்திருந்தார். கடைசிவரை வேலை கிடைக்காத விரக்தியில், வேறு வழியின்றி மாடு மேய்க்க இறங்கிவிட்டார். 

மாடு மேய்ப்பு: கடந்த 2021-ஆம் ஆண்டு, ஒரு நாள் தான் மாடுமேய்க்கும்போது, இன்ஸ்டாகிராமில்  பேசி ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டிருந் தார் ஸ்ரீஷா.. அதில், "நான் தான் பரேலக்கா.. எவ்வளவுதான் படிச்சி, டிகிரி வாங்கினாலும் நமக்கு இந்த தெலங்கானா அரசு வேலை தராது. அதனாலதான் பிகாம் படிச்சிட்டு, என் அம்மா தந்த காசில், 4 எருமை மாடு வாங்கிட்டு, இப்படி மேய்ச்சிட்டு இருக்கேன். இன்னும் எம்பிஃல், பிஎச்டி படித்தவர்களுக்கெல் லாம் வேலைவாய்ப்பு கிடைக் காது" என்று பேசியிருந்தார். அப்போது சிறீஷா பேசிய இந்த காட்சிப் பதிவு இணையத்தில் வைரலானது.. இளைஞர்களின் மத்தியில் புதுவித தாக்கத்தை ஏற்படுத்தியது.. இந்த ஒரு காட் சிப்பதிவு மட்டும் 9 லட்சம் "சப்ஸ் கிரைப்பர்"களை சிறீஷாவுக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

வேலைவாய்ப்பு: இதோ, மாநிலத்தில் நிலவும் வேலை வாய்ப்பு பிரச்சினையையே மய்யமாக வைத்து, போட்டியாள ராக களமிறங்கினார். தெலங் கானாவின் மிக இளம் வயது பெண் வேட்பாளரான சிறீஷா வுக்கு, தெலங்கானா பல் கலைக்கழக மாணவர்களே பிரச் சாரத்தில் குதித்தனர்.. "இளவரசி பரேலக்கா" என்று பெயர் சிறீஷாவுக்கு ஒரு பட்டப்பெயரை வைத்து, செல்லுமிடமெல்லாம் பாடல்களை பாடி, பொது மக்களை கவர்ந்து வாக்குகளைக் கேட்டனர். காங்கிரஸின் மேனாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதியின் சட்டமன்ற உறுப்பினர் பி. ஹர்ஷவர்தன் ரெட்டி ஆகியோருக்கு எதிராக   14 பேரில் ஒருவராக  களமிறங்கி  வெற்றியும் பெற்று உள்ளார் சிறீஷா.


No comments:

Post a Comment