ஒன்றிய அரசின் கள்ள மவுனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 30, 2023

ஒன்றிய அரசின் கள்ள மவுனம்

மனிதக் கடத்தலில் ஒன்றிய அரசு ஏன் கள்ள மவுனம் சாதிக்கிறது என்பது குறித்த சமீபத்தில் வந்த ஒரு செய்தி – கூட்டம் கூட்டமாக குஜராத்திகள் துபாய்க்கு டூரிஸ்ட் விசாவில் செல்கிறார்கள் – அங்கே ஒன்று கூடி ஒரு போயிங் விமானத்தை வாடகைக்கு அமர்த்துகிறார்கள் – அனைவரும் நிகரகுவா நாட்டிற்கு செல்லப் புறப்படுகின்றனர். அங்கிருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாகச் செல்ல வழியில் எரிபொருள் நிரப்ப பிரான்ஸில் விமானத்தை இறக்குகிறார்கள். பிரான்ஸ் காவல்துறைக்கு விமானம் மனிதக் கடத்தலுக்கு பயன்படுகிறது என்று ரகசிய தகவல் தரப்படுகிறது. விமானம் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால், திடீர் திருப்பமாக இந்திய வெளியுறவுத்துறை தலையிடுகிறது. விமானம் அப்படியே ‘யு டர்ன்’ அடித்து மும்பை வருகிறது. பெயரளவிற்கு விசாரணை என்ற பெயரில் நடத்தி அனைவரும் அவரவர் வீட்டிற்குச் செல்கின்றனர். 303 பேரில் 200-க்கும் மேற்பட்டோர் குஜராத்திகள் மற்றவர்கள் அரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் – மிகவும் சொற்பமானவர்கள் தென் இந்தியர்கள் என்று தெரியவருகிறது. இந்த நிலையில் 26.12.2023 மும்பை வந்து இறங்கிய இந்த சட்டவிரோத பயணிகள் மிகவும் ரகசியமாக விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டனர். சில ஊடகவியலாளர்கள் இவர்களைப் படம் பிடிக்கலாம் என்று இருந்த போது அனைவரும் நவி மும்பை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டனர் என்ற தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடன் சென்ற சில தென் இந்தியர்கள் (அகதிகளாக) புகலிடம் கோரி பிரான்ஸிலேயே தங்கி விடுகின்றனர்.
ஏன் நிகரகுவா நாடு?
இந்த நாட்டின் வழியாகத்தான் இந்தியாவின் பல கருப்புப்பண கொள்ளைக்காரர்கள் தப்பிச்செல்கின்றனர்.
நீரவ் மோடி, மோகுல் சோக்‌ஷி, உள்ளிட்ட பலர் – சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ஒரு செய்தி.
We are making all efforts to bring these people (like Nirav Modi) back to India. EAM Sushma Swaraj has recently spoke to the President of Nicaragua over the issue of extradition:
ஏ.என்.அய். Oct 1, 2018

நித்தியானந்தாவும் இதே போன்றுதான் நேபாளத்தில் இருந்து துபாய் சென்று அங்கு தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து தனது சீடர் படையுடன் நிகரகுவா சென்று ஈக்வடார் நாட்டில் இருக்கிறார் என்று உறுதியற்ற தகவல் உலவுகிறது.

No comments:

Post a Comment