பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை “மிமிக்ரி” செய்யவில்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 21, 2023

பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை “மிமிக்ரி” செய்யவில்லையா?

புதுடில்லி,டிச.21- நாடாளுமன்ற மக்களவை யில் கடந்த வாரம் புதனன்று வண்ணப் புகைக்குப்பி களை வீசி அத்துமீறிய விவகாரம் தொடர்பாக பெண் உட்பட 6 பேரை டில்லி காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், ஒன் றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கக்கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாதுகாப்பு தோல்வியை மறைக்கவும், நாடாளு மன்றத்தில் விளக்கம் அளிக்காமல் தப்பிப்பதற்காகவும் அவையை அமைதியின்மை ஆக்கியதாக கூறி 143 எதிர்க்கட்சி எம்பிக்களை இடை நீக்கம் செய்தது ஒன்றிய மோடி அரசு.
இந்த எதேச்சதிகாரத்தை கண் டித்து 19.12.2023 அன்று செவ்வா யன்று இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்ற வாயிலில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி தன்னைப்போல “மிமிக்ரி” செய்ததாகவும், இதனை ஆதரித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வீடியோ எடுத்ததாகவும் துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து ஜகதீப் தன் கரை பிரதமர் மோடி தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு தனது வேதனையை வெளிப் படுத்தியதாக கூறப்பட்டது.
தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு “மிமிக்ரி” சம்பவம் குறித்து தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். ஒன்றிய நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “மிமிக்ரி சம்பவத் திற்கு “இந்தியா கூட்டணி” மன் னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

திசை திருப்பும் பா.ஜ.க.
நாடாளுமன்ற பாதுகாப்பு தோல்வி மற்றும் 143 எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்க விவகாரத்தை திசை திருப்பும் நோக்கில் கல்யாண் பானர்ஜியின் “மிமிக்ரி” விவகா ரத்தை கையிலெடுத்துள்ளது பாஜக. “மிமிக்ரி விவகாரத்தை பாஜக வேண்டுமென்றே சர்ச்சைக் குள்ளாக்குகிறது. 143 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் சூழ்ச்சி இது” என காங்கிரஸ் பொதுச்செயலாளரும், இடை நீக்கம் செய்யப்பட்ட எம்பியு மான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடி “மிமிக்ரி” செய்யவில்லையா?
இந்நிலையில், “மிமிக்ரி” விவகா ரம் தொடர்பாக செய்தியாளர்களி டம் பேசிய கல்யாண் பானர்ஜி,“நான் எவரையும் புண்படுத்தும் நோக்கத் தில் செயல்படவில்லை. நான் ஜகதீப் தன்கர் அவர்களை மிகவும் மதிக்கிறேன். அவர் ஏன் இதைத் தனிப்பட்ட வகையில் எடுத்துக் கொள்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை.பிரதமர் மோடி கூட 2014 -2019-க்கு இடையில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர்களை “மிமிக்ரி” செய்தார். அவர் அவ்வாறு செய்ததை எல்லோரும் சீரியஸாக எடுக்காமல், நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டனர். இப்போது என் விஷயத்தில் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல” எனக் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியை “பப்பு” என அழைத்தபொழுது பா.ஜ.க. சிரித்தது
கடந்த 2018இல் தேசிய ஜன நாயக கூட்டணி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் பொழுது நாடாளுமன்ற மக்களவை யில் பிரதமர் மோடி ராகுல் காந்தி எம்பியை “பப்பு (குழந்தைத் தனமான)” என சைகை மூலம் “மிமிக்ரி” செய்து கிண்டலடித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் மோடி கிண்டல் செய்ததை ஆதரித்து பாஜக அமைச்சர்கள், எம்பிக்கள் சிரித்தனர். ராகுல் காந்தி கூட, “நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள். அதனால் என்னை “பப்பு” என்று அழைக்கிறீர்கள் மோடி. ஆனால் நான் உங்களை வெறுக்கவில்லை” என பெருந்தன்மையாக பேசினார். ராகுல் காந்தியை “மிமிக்ரி” செய்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டுகொள்ள வில்லை. ஆனால் தற்பொழுது திரி ணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி “மிமிக்ரி” செய்ததாக கூறி சாதாரண செயலுக்குக் கூட பிரதமர் வேதனை தெரிவிப்பதும், பாஜக அமைச்சர்கள், தலைவர்கள் கொந்தளித்து அறிக்கை விடுவதும் என எதிர்க்கட்சி எம்பிக் களின் இடைநீக்க பிரச்சினையை திசை திருப்ப தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

No comments:

Post a Comment