நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 14, 2023

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை,டிச.14- நாடாளுமன்றத்தில் ஏற் பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாய கத்துக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்கள வைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பர வியது. அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாயகத்துக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது.
தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடி விசாரணையைத் தொடங் கவும், பொறுப்புக்கூறலைச் சரிசெய்யவும், எதிர்காலத் தவறுகளைத் தடுப்பதற்கான நட வடிக்கைகளைச் செயல்படுத்தவும், நாடாளு மன்றத்தின் பாதுகாப்பை நம்மிடம் உள்ள அனைத்து வலிமையுடன் உறுதிப் படுத்தவும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாவது பல அய்யங்களை எழுப்பியுள்ளது
கருநாடக முதலமைச்சர் சித்தராமையா

பெங்களூரு, டிச.14- பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாவது பல அய்யங்களை எழுப்பியுள்ளது என நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசிய சம்பவம் குறித்து கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். நல்வாய்ப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருப்பது நிம்மதி அளிக்கிறது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment