பெரியாரை பற்றி நூல் எழுதிய பேராசிரியருக்கு பெரியார் பல்கலைக்கழகம் அச்சுறுத்தல் தொல்.திருமாவளவன் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 11, 2023

பெரியாரை பற்றி நூல் எழுதிய பேராசிரியருக்கு பெரியார் பல்கலைக்கழகம் அச்சுறுத்தல் தொல்.திருமாவளவன் கண்டனம்

featured image

சென்னை,டிச.11 – பெரியார் பல் கலைக்கழக நிர்வாகத்தின் ஜன நாயக விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட் சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கையில்,
“சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இரா.சுப்பிரமணி அவர்கள், “பெரி யாரின் போர்க்களங்கள்”, “மெக் காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன்” ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

அதனால், அவருக்கு பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்’ பல் கலைக் கழகத்தின் அனுமதி பெறா மல் எப்படி நூல்கள் வெளியிட லாம்’ என விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி உள்ளது. இது அவரை அச்சுறுத்தும் நடவடிக்கை யாகும். இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்னும் நூலாசிரியர் இரா.சுப்பிர மணி பல்கலைக் கழகத்திலுள்ள ‘பெரியார் இருக்கைக்கு’ இயக்கு நராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கல்வி நிலையங்களில் ஜனநாய கத்தைக் கற்பிக்கும் ஒரு பேராசி ரியரின் ஜன நாயக உரிமைகளைப் பறிப்பது ஏற்புடையதல்ல.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நிர்வாக விதி முறைகளைப் பற்றிக் கவலைப் படுகிறாரா? அல்லது பெரியாரைப் பற்றி அவர் நூல் எழுதியதற்காக ஆத்திரப் படுகிறாரா? என்னும் கேள்வி எழுகிறது. துணை வேந்தரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது.

பேராசிரியர் இரா.சுப்பிரமணி அவர்களைப் பழி வாங்கத் துடிக் கும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக் கையும் துணைவேந்தரின் ஸநாதன அரசியல் நடவடிக்கையினையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக் கிறோம். கருத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத் திட ஜனநாயக சக்திகள் அனைவரும் இத்தகைய ஸநாதன ஃபாசிச சக்தி களுக்கு எதிராக அணி திரள வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” எனக் குறிப்பிட்டுள் ளார்.

No comments:

Post a Comment