அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 4, 2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டார்


சென்னை, டிச. 4-
தி.மு.கழக இளைஞர் அணிச் செய லாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நேற்று இரவு, தமது சேப்பாக்கம் - திரு வல்லிக்கேணி தொகு திக்கு உட்பட்ட லாயிட்ஸ் காலனி, வி.பி. ராமன் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ஜான் ஜானி கான் சாலை, சி.என்.கே. சாலை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் கொட் டுகிற மழையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சாலையில் தேங்கியிருந்த மழைநீரை விரைந்து அகற்ற அதிகாரிகளை அறிவுறுத்தினார். மற் றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சென்னை மேற்கு மாவட்டச் செய லாளர் நே.சிற்றரசு எம்.சி., பகுதிச் செயலாளர் எஸ். மதன்மோகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆர்.என்.துரை, வி.எஸ்.கலை, மாவட்ட மாண வரணி அமைப்பாளர் துபாய் விஜய், கமலா செழியன் எம்.சி. உள்ளிட் டோர் உடன் சென்றனர்.


No comments:

Post a Comment