ஸநாதன தர்மம் குறித்த வழக்கில் தனி நீதிபதி கருத்தை நீக்க வேண்டும் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மனு தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 9, 2023

ஸநாதன தர்மம் குறித்த வழக்கில் தனி நீதிபதி கருத்தை நீக்க வேண்டும் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மனு தாக்கல்

featured image

சென்னை, டிச. 9 – ‘ஸநாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் களின் பேச்சு குறித்து, நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கோரி, திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்வுகளில் பேசும் போது, மக்களுக்குள் பிளவு ஏற்படாதவாறு, மிக கவனமுடன் பேச வேண்டும்.

‘குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிப்பதில், அமைச் சர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

‘எந்த மதத்துக்கு எதிராகவும் பேச, நீதிமன்றம் அனுமதிக்காது. மாநாட்டில் பங்கேற்ற அமைச் சர்கள், ஆளுங்கட்சியை சேர்ந்தவர் களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் கடமை தவறி விட்டனர்’ என்று கூறி, அக்., 31இல், மகேஷ் கார்த்தி கேயன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன் றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய் துள்ளார். ஸநாதன ஒழிப்பு மாநாட் டில் பங்கேற்ற அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் என்ற, தனி நீதிபதியின் கருத்து தேவையற்றது; தவிர்த் திருக்கக்கூடியது.

அவருடைய உத்தரவும் சட்டப் படி நிலைக்கத்தக்கதல்ல. வழக்கில் தீர்ப்பளிக்கும் முன், நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகள் தொடர் பாக பின்பற்ற வேண்டிய வழி முறைகள் குறித்த, உயர் நீதிமன்ற உத்தரவுகளை தனி நீதிபதி பின் பற்றவில்லை.

நான் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறேன். தனி நீதிபதி விசாரித்த வழக்கு, எனக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதது. அவ்வாறு கருத்து தெரிவிக்கும் முன், என் கருத்துகளை நீதிபதி கோரவில்லை.

ஸநாதனம் பேச்சு தொடர்பான, ‘கோ-வாரண்டோ’ வழக்கு களை விசாரித்து வரும் மற்றொரு நீதிபதி முன் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
தனி நீதிபதியின் கருத்தை, எங் கள் அரசியல் எதிரிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது, எங்க ளின் அடிப்படை உரிமை, பேச்சு சுதந்திரத்தை மீறும் செயல்.
எனவே, அமைச்சர்கள் குறித்து தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை உத்தரவில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment