கடலூர் மாவட்ட கழகம் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் 91ஆவது பிறந்தநாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

கடலூர் மாவட்ட கழகம் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் 91ஆவது பிறந்தநாள் விழா

featured image

நெய்வேலி, டிச. 7- திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழா நெய்வேலி நகரில் 2.12.2023 அன்று மாலை 6 மணி அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க ஓ.பி.சி. மகாலில் மாவட்ட கழகத் தலைவர் தண்டபாணி தலைமை யில் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் அருணாசலம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வெங்கடே சன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட கழக அமைப்பாளர் மணி வேல் வரவேற்புரை ஆற்றினார்.

பேராசிரியர் ராச குழந்தை வேலன் (கட லூர் மாவட்ட தமிழ் சங்க தலைவர்) நடுவராக கொண்டு சமூக நீதி கருத் தரங்கம் நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசே க ரன் “சமூக நீதி தடத்தில் ஆசிரியர் வீரமணியின் பங்கு” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் இளவரசி சங்கர், “பெண் விடுதலை” எனும் தலைப் பிலும், கவிஞர் எழில் ஏந்தி “பகுத்தறிவு பான்மை” எனும் தலைப்பிலும், நா.தாமோதரன் ஆசிரியர் வீரமணியின் “கல்வித் தொண்டு” குறித் தும் கருத்தரங்க உரை ஆற்றினர்.

வேகாகொல்லை மாணிக்கவேல் பாடல் கள் பாடினார். கவிஞர் தீபக் கவிதை மழை பொழிந்தார் மற்றும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் முனியம் மாள், தமிழ் ஏந்தி, கலைச்செல்வி, சுமலதா, திராவிட மணி மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வேலு, கழக பேச்சாளர் புலவர் ராவணன், கோடையிடி குணசேகரன், இடிமுழக் கம் இந்திரஜித், நெய்வேலி நகர கழகச் செயலாளர் ரத்தின சபாபதி, நூலகர் கண்ணன், வடக்குத்து கிளை தலைவர் தங்க பாஸ்கர் ஆகியோர் நிகழ் வில் பங்கேற்றனர்.

முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது முடிவில் நெய்வேலி நகர கழக தலைவர் இசக்கி முத்து நன்றி கூறினார்.

No comments:

Post a Comment