தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்களால் பயனடைந்தோர் 8 லட்சம் பேர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 11, 2023

தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்களால் பயனடைந்தோர் 8 லட்சம் பேர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

featured image

சென்னை,டிச.11- தமிழ்நாடு முழு வதும் 7 வாரங்களாக நடந்த மருத் துவ முகாம்களில் 7.83 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அப்பாவு நகர், பன்னீர்செல்வம் நகர், காரணிஸ்வரர் நகர், ஜாபகர்கான் பேட்டை, ஈக் காட்டுத் தாங்கல், மடுவின்கரை, கோட்டூர்புரம் பகுதிக ளில் 7 தனியார் மருத்துவமனைகள் பங்கேற்ற மழைக்கால மருத்துவ முகாம்களை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (10.12.2023) தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மிக்ஜாம் புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக் கைகள், நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின் றன. வடகிழக்குப் பருவ மழை தொடங்கப்பட்ட நாள் முதல் ஒவ் வொரு வாரம் சனிக்கிழமையன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 7ஆவது வாரமாக நேற்று முன்தினம் (9.12.2023) 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங் களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
இதுவரை நடத்தப்பட்ட 16,516 முகாம்கள் மூலம் 7,83,443 பேர் பயனடைந்துள்ளனர். தொடர்ச்சி யாக மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டதன் காரணமாக டெங்கு பாதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2015இல் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை நாடாளுமன்றமே விமர்ச னம் செய்துள்ளது. அதனால், இந்த அரசைப் பற்றிக் குறை சொல்ல எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக் கும், ஜெயக்குமாருக்கும் எந்த தார்மீக உரிமை இல்லை.

சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி, மண்டல குழுத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment