சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 12, 2023

சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

featured image

சென்னை, டிச.12- ‘மிக்ஜாம்’ புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் அனைத்து ரேஷன் அட்டைதா ரர்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவா ரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதுதொடர்பாக, தமிழ் நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று (11.12.2023) செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: மிக்ஜாம் புயல், பெருமழைக்கு பின்னர் சென்னை மாநகரம் தற்போது மீண்டெழுந்து உள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள், முதல மைச்சர் மேற்கொண்ட ஆய்வு கள் மற்றும் அவரது ஈடுபாட் டின் காரணமாக சென்னைக்கு வர இருந்த பேராபத்து தவிர்க் கப்பட்டுள்ளது. புயலுக்கு பின் னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக இன்றைக்கு பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாக திரும்பி இருக் கிறார்கள்.
மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண தொகை யாக ரூ.6 ஆயிரம் அறிவித்துள் ளார். இது பொதுமக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியை யும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழ்நாட்டில் இருக்கும் சில எதிர்க்கட்சிகள் அரசின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

கடந்த 2021ஆம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்த போது, தமிழ்நாடு கரோனாவின் கொடும் பிடியில் சிக்கி இருந்தது. அன் றைக்கு வடமாநிலங்களில் கங் கையில் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன.

டில்லி மாநகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் எல்லாம் ஆக்சிஜன் கிடைக்காமல் மக் கள் அவதி அடைந்தார்கள். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் முதலமைச்சரின் சீரான தலை மையில் அவரது முழு ஈடு பாட்டோடு கரோனா பேரி டர் நடவடிக்கைகளை திமுக அரசு மிக சிறப்பாக மேற் கொண்டது.

முதலமைச்சரே கவச உடை அணிந்து கொண்டு கரோனா வார்டுக்குள் சென்று நோயா ளிகளை சந்தித்து நலம் விசா ரித்து ஆறுதல் கூறினார். டில் லியில் உட்கார்ந்து கொண்டு மணியை ஆட்டுங்கள், கையை தட்டுங்கள் என்று சொல்ல வில்லை. களத்தில் இறங்கி முதலமைச்சர் பணியாற்றினார் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஒரு இயற்கை பேரிடர் ஏற்பட்டால் எப்படி கையாள வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக திமுக அரசு அன் றைக்கு செயல்பட்டது.

கரோனா பேரிடரை எதிர் கொண்டது போன்றுதான் இந்த பேரிடரிலும் திமுக அரசு முன்னணியில் இருந்து போரா டியது. தலைவன் என்பவன் முன்னணியில் இருந்து போரா டுபவனாக இருக்க வேண்டும். முதலமைச்சர் கரோனா பேரி டரில் எப்படி முன்னணியில் இருந்தாரோ, அதேபோன்று இந்த பேரிடரிலும் முதலமைச் சர் முழுமையாக களத்தில் இருந்தார்.
‘எங்களுக்கு ஓட்டு போட்ட வர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். எங்களுக்கு ஓட்டு போடாதவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்று நிச் சயம் வருத்தப்படும் வகையில் எங்களுடைய பணிகள் இருக் கும்’ என்று முதலமைச்சர் ஏற்கெனவே சொல்லி இருக் கிறார்.

இந்த வெள்ளத்திலும் அர சியலை பார்க்காமல் அனை வருக்கும் திமுக அரசு ஒட்டு மொத்தமாக களம் இறங்கி இந்த பேரிடரை சமாளித்து இருக்கிறது.
சென்னை மாநகரை பொறுத்த வரையில் 2015ஆம் ஆண்டு வந்த வெள்ளப்பெருக்கை அன்றைய ஆட்சியாளர்கள் எந்த அள வுக்கு மோசமாக கையாண் டார்கள் என்பதையும், தற் போது தமிழ்நாடு அரசு மேற் கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இன்றைக்கு உயிரிழப்புகள், சேதாரம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை ஆங்கில பத்திரிகை யின் கட்டுரையில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.

சென்ற ஆட்சியில் ஜெயல லிதா படத்தையோ, எடப்பாடி பழனிசாமி படத்தையோ போட்டு நிவாரணப் பொருட் கள் வழங்கியது போன்று இந்த ஆட்சியில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டக் கூடிய வேலைகளை செய்யா மல் நிவாரணப் பொருட்களை வழங்கி கொண்டிருக்கிறோம்.

2015ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது அதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண் டும் என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
வெள்ள சேதத்தை பார்த்து அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழ்நாட்டுக்கு செல்லாதீர் கள் என்று சொல்லக்கூடிய வகையில் நிலைமை மோசமாக இருந்தது. அப்போது நிவார ணப் பணிகளில் ஒருங்கி ணைப்பு இல்லை என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி யது.

2015ஆம் ஆண்டு மழை நிவாரணப் பணிகளுக்கு ரூ.10,250 கோடி நிதி வேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் ஜெய லலிதா ஒன்றிய அரசிடம் கேட்டார். அவர் அன்றைக்கு மக்களுக்கு வழங்கிய நிவாரண தொகை ரூ.5 ஆயிரம்.

இன்றைக்கு ரூ.5,200 கோடி தான் கேட்டிருக்கிறோம். ஆனால் ரூ.6 ஆயிரம் நிவாரண மாக வழங்குகிறோம். இந்த நிவாரணத்தை ஒன்றிய அரசு தான் வழங்குகிறது என்று தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை சொல்லி இருக் கிறார். வெள்ளம் வந்தபோது கமலாலயத்தின் கதவுகளை பூட் டிக் கொண்டு உள்ளே இருந் தவர்கள் எல்லாம், வெள்ளம் வடிந்த பின்னர் வெளியே வந்து அறிக்கைகளை வெளி யிட்டு கொண்டிருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப் பாடி பழனிசாமி முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுக் கொண்டு பேட்டி அளித்து விட்டு சேலத்துக்கு சென்று விட்டார். இன்றைக்கு இந்த நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சொல்கிறார். ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஒரு வர் சொல்கிறார். ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மற்றொருவர் சொல்கிறார்.
நான் அண்ணாமலையிடம் கேட்டுக்கொள்வது, நீங்கள் ஒன்றிய அரசிடம் பேசி தமிழ் நாடு அரசு கேட்டுள்ள நிதியை பெற்று தர வேண்டும். ஏற்கெ னவே ஜிஎஸ்டி நிலுவைத் தொகைக்காக தொடர்ச்சியாக போராடி கொண்டிருக்கி றோம்.

2014-2015 முதல் 2021-2022 வரையில் ஒன்றிய அரசின் நேரடி வரி பகிர்வாக நாம் கொடுத்திருப்பது ரூ.5.16 லட் சம் கோடி. இதே காலக்கட்டத் தில் வரி பகிர்வாக ஒன்றிய அரசிடம் நாம் பெற்றிருப்பது ரூ.2.08 லட்சம் கோடிதான். தற்போது தமிழ்நாடு அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசிடம் பெற்று தரும் வேலையை அண் ணாமலை முதலில் செய்ய செய்துவிட்டு, அதற்கு பின்னர் அவருடைய விமர்சனங்களை முன் வகைக்கலாம்.

சென்னையை பொறுத்த வரையில் குடும்ப அட்டைதா ரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும். இதற்கு ‘டோக் கன்’ வழங்கும் பணி 16ஆம் தேதி தொடங்கும். அடுத்த 10 நாட்களில் இந்த பணி நிறை வடையும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட் டங்களை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட வட்டங்களில் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணத் தொகை கிடைக்கும்.

நிவாரணத் தொகை வழங் குவதற்கான ஆதாரமாக குடும்ப அட்டை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பாதிக்கப்படுபவர்கள் அரசிடம் முறையீடு செய்ய லாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தியபோது புகார்கள் வந்தது. ஏதேனும் கடன் இருந் தால் வங்கிகள் அந்த தொகையை பிடித்தம் செய்துக் கொள்கிறார்கள்.
தற்போது கஷ்டத்தில் இருக் கும் மக்கள் கையில் பணம் நேரடியாக போய் சேர வேண்டும். வங்கிகளில் பணம் செலுத்தி அவர்கள் பிடித்தம் செய்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு சென்றடையாது என்ப தால்தான் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் நேரடியாக கொடுக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

No comments:

Post a Comment