புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைக்கு 300 மருத்துவக் குழுக்கள் பொது சுகாதாரத்துறை நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 12, 2023

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைக்கு 300 மருத்துவக் குழுக்கள் பொது சுகாதாரத்துறை நடவடிக்கை

featured image

சென்னை, டிச.12 – சென்னை உள் ளிட்ட 4 மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக ளில் சுகாதார நடவடிக்கை மேற் கொள்ள 300 மருத்துவக் குழுக் களை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை சார்பில் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
புயல் பாதிக்கப்பட்ட இடங்க ளுக்கு நோய் பரவாமல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 300 மருத் துவ குழுக்கள் (நடமாடும் மருத்து வக் குழு மற்றும் ஆர்.பி.எஸ்.கே. குழு) அனுப்பப்பட்டன.

பாதிக்கப்பட்ட மாவட்டங்க ளான சென்னை மாநகராட்சிக்கு 159 குழுக்கள், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 60 குழுக்கள், திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி பகுதிகளுக்கு 51 குழுக்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 30 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் கடும் வெள்ள பாதிப்பு மற்றும் தண்ணீர் தேங்கியுள்ளதால், புயல் பாதித்த பகுதிகளில் தடுப்பு மற்றும் கட்டுப் பாட்டு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக் கைகளை கண்காணிக்க துணை சுகாதாரத்துறை இயக்குநர்கள் மற் றும் கூடுதல் சுகாதாரத்துறை இயக் குநர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர்.
இவர்கள் சென்னை மாநக ராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஒருங் கிணைந்து மருத்துவ முகாம்கள், வெக்டார் கட்டுப்பாடு, குளோரி னேஷன் மற்றும் பிற சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

இந்த குழுக்கள் மூலம் எடுக்கப் படும் பரிசோதனை முடிவுகளை தினசரி அறிக்கையாக பொது சுகா தார இயக்குநரகம் மற்றும் சம்பந் தப்பட்ட அதிகாரிகளிடம் இயக்கு நர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment